வழிகாட்டுதல் நிகழ்ச்சி
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்ட வேலை வாய்ப்பு பயிற்சித்துறை, பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மையினர் நல அலுவலகம், மாவட்ட வேலை வாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டும் மையம் இணைந்து விடுதி
மாணவர்களுக்கான வாழ்க்கை வழிகாட்டுதல் நிகழ்ச்சி பழைய கலெக்டர்அலுவலகம் கூட்ட அரங்கத்தில் நடந்தது.
மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் மதுக்குமார், சீர்மரபினர் நல அலுவலர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் மாரிமுத்து முன்னிலை வகித்தனர். உயர்கல்வி வாய்ப்புகள் பற்றி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சிவக்குமார் பேசினார்.
சுய வேலைவாய்ப்புகள்குறித்த விழிப்புணர்வு கருத்துக்களை மாவட்ட தொழில் மையம் பொது மேலாளர் திரிபுரசுந்தரி விளக்கினார்.
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் அருண்நேரு, மாதிரி தொழில் நெறி வழிகாட்டும் மையம் அம்மா பொண்ணு, சுமதி, விடுதி காப்பாளர் சரவணன்பங்கேற்றனர்.