பள்ளி நிறுவனங்களில் பொங்கல் விழா

விருதுநகர்: விருதுநகரில் செவித்திறன் குறைவுடையோர் பள்ளியில் பொங்கல் விழா நடந்தது. ஆசிரியர்கள், மாணவர்கள் பாரம்பரிய உடை அணிந்து வந்தனர். வளாகத்தில் பொங்கலிட்டனர்.

மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகள், மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. ஏற்பாடுகளை தலைமை ஆசிரியர் சிவகாமி சுந்தரி தலைமையிலான ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

சாத்துார் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வக்கீல்கள் சங்கம் சார்பில் நேற்று சமத்துவ பொங்கல் விழா நடந்தது.

உதவி அமர்வு நீதிபதி முத்து மகாராஜா தலைமை வகித்தார்.வக்கீல் சங்கத் தலைவர் மாரிமுத்து வரவேற்றார். வக்கீல்கள் முனிஸ்வரன், கணபதிராமன், முன்னிலை வகித்தனர்.

துாய்மை பணியாளர்களுடன்வக்கீல்கள் இணைந்து பொங்கலிட்டனர்.மாணவர்கள் மற்றும் வக்கீல்கள் விழாவில் கலந்து கொண்டனர்.

*காரியாபட்டியில் லயன்ஸ் கிளப் சார்பாக பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. தலைவர் அழகர்சாமி தலைமை வகித்தார். நிர்வாகி ஜெயபிரகாஷ் முன்னிலை வகித்தார்.

செயலாளர் விக்டர் வரவேற்றார். பேரூராட்சி தலைவர் செந்தில் மக்களுக்கு பொங்கல் வழங்கினார்.

நிர்வாகிகள் தங்கப்பாண்டியன், ரமேஷ் குமார், குருசாமி, ராஜாத்தி, முனீஸ்வரன், பிரின்ஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர். பொருளாளர் ராமசாமி நன்றி கூறினார்.

Advertisement