குவாரி தொழிலாளர்கள் மீது தாக்குதல்: நடவடிக்கை எடுத்த முதல்வருக்கு கோரிக்கை

முதல்வர் ஸ்டாலினுக்கு கூனிபாளையம் ஊர் மக்கள் அனுப்பி உள்ளபுகார் மனுவில் கூறியிருப்பதாவது:

திருவள்ளுர் மாவட்டம், ஊத்துக்கோட்டை வட்டம் கூனிப்பாளையம் கிராமத்தில் இயங்கி வந்த மண் குவாரியில் கடந்த 4 நாட்களாக தனியார் நிறுவனத்தை சார்ந்த திருநெல்வேலி மாவட்டம், புதுக்கோட்டை மாவட்டம் சேர்ந்த இருவரும் குவாரியில் 100 க்கும் மேற்பட்ட ரவுடிகளுடன் கடந்த செவ்வாய் கிழமை காலை 11.15. கை துப்பாக்கி மற்றும் ஆயுதங்களுடன் வந்து குவாரியில் பணிபுரியும் ஊழியர்களை தாக்கி பணத்தை திருட முயற்சித்தனர்.


இதை பார்த்த ஊர் மக்கள் தடுத்து நிறுத்திய போது அவர்கள் ஊர் மக்களை தாக்கிய போது ஊர் மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்தனர். இதை கண்ட தனியார் நிறுவனத்தை சார்ந்த இருவர் மற்றும் ரவுடிகள் தாங்கள் வந்த வாகனத்தை அங்கயே விட்டு விட்டு ஒடிவிட்டனர்.


அருகில் உள்ள காவல்நிலையத்தில் புகார் அளித்தும் எந்த பயனும் இல்லை.
இது சம்மந்தமாக மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரை சந்தித்து சட்டபடி உடனே தனியார் நிறுவன ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்து எங்களுக்கும் எங்கள் உயிருக்கும். உடமைக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது

Advertisement