கும்பகோணம் மாநகராட்சி ஆணையர் மீது ஒழுங்கு நடவடிக்கை: ஐகோர்ட் உத்தரவு

5


சென்னை: கும்பகோணம் மாநகராட்சி ஆணையர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.


கும்பகோணத்தில் உள்ள பொற்றாமரை குளம், அதற்கு நீர்செல்லக்கூடிய வாய்க்காலில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி தொடரப்பட்ட வழக்கில், கடந்த 2018ம் ஆண்டு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது. ஆனால், இந்தப் பணிகளில் மாநகராட்சி நிர்வாகம் மெத்தனம் காட்டியதாக தெரிகிறது.


இதனால், தஞ்சை மாவட்ட நிர்வாகத்திற்கு பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தவில்லை என்று கோர்ட் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. அப்போது, ஆக்கிரமிப்புகளை அகற்ற கும்பகோணம் மாநகராட்சி ஆணையர் ஒத்துழைப்பு தரவில்லை ஓய்வுபெற்ற நீதிபதி அறிக்கை சமர்பித்தார்.


இது தொடர்பாக விசாரணை நடத்திய சென்னை ஐகோர்ட், கும்பகோணம் மாநகராட்சி ஆணையர் செந்தில் முருகன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. அவர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து ஜன.,27ல் அறிக்கை அளிக்கவும் ஆணை பிறப்பிக்கப்பட்டு, விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது.

Advertisement