போலீசாரை ஏவி கிராம மக்கள் மீது வெறியாட்டம்; அண்ணாமலை குற்றச்சாட்டு!
சென்னை: ''விசாரணை என்ற பெயரில், போலீசாரை ஏவி விட்டு, கிராம மக்கள் மீது வெறியாட்டம் நடத்துகின்றனர். விழுப்புரம் மாவட்டம் இருவேல்பட்டு கிராம மக்கள் மீதான நடவடிக்கையை கைவிட வேண்டும்,'' என்று பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
அவரது அறிக்கை:
மெட்ரோ தூணில் ஒட்டப்பட்ட முதல்வர் ஸ்டாலின் போஸ்டர் மீது செருப்பால் அடித்த வயதான தாயார் ஒருவரைத் தேடி அலைந்தார்கள். தற்போது, அமைச்சர் பொன்முடி மீது சேற்றை வீசிய பொதுமக்களைத் தேடி அலைகிறார்கள். தி.மு.க., ஆட்சி நடக்கும் லட்சணத்திற்கு, இனி இதுவே முழு நேர வேலையாக இருக்கும் எனத் தெரிகிறது.
கடந்த டிசம்பர் மாதம் விழுப்புரம் மாவட்டம் இருவேல்பட்டு கிராமத்தில், பெஞ்சல் புயல் பாதிப்புகளைப் பார்வையிடச் சென்ற அமைச்சர் பொன்முடி, காரில் இருந்து இறங்காமல், பாதிப்பு குறித்து விசாரித்ததால், அவர் மீது சேறு வீசப்பட்டிருக்கிறது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள், தங்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்காததால் ஏற்பட்ட ஆதங்கத்தாலும், இயலாமையினாலும் நடைபெற்ற நிகழ்வே தவிர, தனிப்பட்ட காரணங்களுக்காக அல்ல. இதை பெருந்தன்மையாக விட்டு விடுவதாக அமைச்சர் பொன்முடி அப்போது கூறிவிட்டு, தற்போது, அந்தக் கிராம மக்கள் மீது போலீசாரை ஏவி விட்டு வெறியாட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
விசாரணை என்ற பெயரில், கிராம மக்களைக் போலீஸ் ஸ்டேஷன் அழைத்துத் துன்புறுத்துவதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்திய பெண்கள் உட்பட அனைவரையும் பலவந்தமாகக் கைது செய்திருக்கிறார்கள்.
போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர், ஒரு சகோதரியின் கைகளைப் பிடித்து இழுக்கும் காணொளியைக் காண நேர்ந்தது. இது பெண்களைக் கைது செய்யும்போது, பெண் போலீசார் இருக்க வேண்டும் என்ற அடிப்படை வரைமுறையை முற்றிலும் மீறியிருப்பதாகும். புயல் பாதிப்பினால் பெரிதும் பாதிக்கப்பட்ட மக்கள், இன்னும் முழுமையாக மீண்டெழவில்லை. தி.மு.க., அரசு புயல் பாதிப்புகளைச் சரியாகக் கணிக்கத் தவறியதோடு, மிகவும் மெத்தனப் போக்கில் நிவாரணப் பணிகளை மேற்கொண்டதைத் தமிழக மக்கள் அறிவார்கள்.
நான்கு பேரை வைத்து சினிமா ஷூட்டிங் நடத்தி, நல்லாட்சி நடக்கிறது என்று தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொண்டிருக்கும் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சர்களுக்கு, பொதுமக்களிடையே இருக்கும் எதிர்ப்பை எதிர்கொள்ள முடியாமல், பொதுமக்கள் மீது அதிகார வன்முறையைப் பிரயோகிக்கிறார்கள்.
முதல்வர் ஸ்டாலின், தங்கள் ஆட்சியின் அவலத்தைச் சரி செய்யாமல், அப்பாவி பொதுமக்களைத் துரத்துவது ஏன்? தி.மு.க., அரசு, இந்த உளுத்துப் போன காரணங்களைச் சொல்லி பொதுமக்களைப் பழிவாங்குவதை நிறுத்தி விட்டு, பெஞ்சல் புயல் நிவாரணப் பணிகள், பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் கிடைத்திருக்கிறதா என்பதை உறுதி செய்யும் பணிகளில் உடனடியாக கவனத்தைச் செலுத்த வேண்டும். இருவேல்பட்டு கிராம மக்கள் மீதான நடவடிக்கைகளை உடனடியாகக் கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அண்ணாமலை அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
வாசகர் கருத்து (22)
Kumar - Newyork,இந்தியா
15 ஜன,2025 - 02:18 Report Abuse
காவல்துறை ஆண் ஒருவரை விசாரணைக்கு அழைத்துச்செல்லும் போது தன் கடமையை செய்யும்போது அந்த பெண்மணி தடுக்கிறது, அதனால் அந்த பெண்மணியை காவல்துறை ஆண் ஒருவர் அப்புறப்படுத்துகிறார். காவல்துறை கடமையை தடுத்த அந்த பெண்மணி மேல்தான் வழக்கு போட வேண்டும். தொலைக்காட்சியை சரியாக பார்க்கவும்.
0
0
Reply
Raj Rethinam - ,இந்தியா
14 ஜன,2025 - 21:59 Report Abuse
Stalin government is impotent Government. Thats why village Women are beaten by Men Police. Shame Shame to Stalin. 2026 he will go to S Shop. Bloody. Ba rd. Bloody
0
0
Reply
Svs Yaadum oore - தொண்டை நாடு , தமிழக ஒன்றியம் , பாரதம் , ஹிந்துஸ்தான் .,இந்தியா
14 ஜன,2025 - 21:11 Report Abuse
மணிப்பூருக்கு போகனுமாம் ...வடக்கன் படிக்காதவன் என்று கூவும் மதம் மாற்றிகள்தான் இங்கே வந்து மணிப்பூர் மணிப்பூர் என்று மணிப்பூர் வடக்கனுக்காக கூவும் ....அதுதான் இந்த மதம் மாற்றிகளுக்கு மத சார்பின்மை ....
0
0
Reply
எஸ் எஸ் - ,
14 ஜன,2025 - 20:56 Report Abuse
இதெல்லாம் முதல்வருக்கு தெரியுமா அல்லது குறுநில மன்னரே போலீசை அனுப்பினாரா?
0
0
sridhar - Chennai,இந்தியா
14 ஜன,2025 - 21:03Report Abuse
முதல்வருக்கு எதுவும் தெரியாது , எழுதி கொடுத்ததை கூட படிக்க தெரியாது .
0
0
Reply
Sundaran - ,இந்தியா
14 ஜன,2025 - 20:36 Report Abuse
அண்ணாமலை அவர்களே மனித உரிமை கழகம் , மகளிர் கமிஷன் ஆகியவற்றுக்கு புகார் செய்யுங்கள் தகுந்த ஆதாரத்துடன்
0
0
Reply
Kasimani Baskaran - Singapore,இந்தியா
14 ஜன,2025 - 20:33 Report Abuse
முரண்பாடுகளின் மொத்த உருவம் திராவிடம். பேசுவதற்கும் செய்வதற்கும் சம்பந்தமே இருக்காது. சமூகநீதி என்று பிளாஸ்டிக் சேர் போடுவது அவர்களின் கொள்கை.
0
0
Ray - ,இந்தியா
14 ஜன,2025 - 21:15Report Abuse
சட்டசபையில் வீல் சேருக்கு அம்மையார் அனுமதித்தார்களா? சுளீர் என்ற கேள்வி வருமே என்ற பயமே காரணம்
0
0
Reply
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
14 ஜன,2025 - 20:06 Report Abuse
தமிழக காவல்துறை திமுக அமைச்சர்களின் கீழ், திமுக அல்லக்கைகள் கட்டுப்பாட்டில் பணிபுரிவதைக்கண்டால் மிகவும் வேதனை அளிக்கிறது. மெத்த படித்த IPS, IAS அதிகாரிகளுக்கு தமிழகத்தில் மரியாதையே இல்லை. அவர்கள் நிலையை கண்டு மிகவும் வருந்துகிறேன். இந்த நிலை மாறவேண்டும். அதற்கு திமுக அராஜக ஆட்சி ஒழியவேண்டும். நல்லாட்சி மலரவேண்டும்.
0
0
Reply
பேசும் தமிழன் - ,
14 ஜன,2025 - 19:30 Report Abuse
மக்கள் விரோத விடியாத ஆட்சி முடிவுக்கு வந்து விடும் போல் தெரிகிறது.... ஆளுநர் அவர்களின் நடவடிக்கை மற்றும் பேச்சு.... அதற்க்கான அறிகுறி போல தான் இருக்கிறது.
0
0
Reply
Sampath Kumar - chennai,இந்தியா
14 ஜன,2025 - 19:26 Report Abuse
எல்லாம் உங்க ஜி மணிப்பூரில் செய்துகொண்டு இருப்பதாய் தான் இனஜ் செய்கிறார்கள் உன்னக்கு தில் ? இருந்த பொய் மணிப்பூரில் பேசு செருப்பு அடி தான் வாங்கு வாய் போவியா
0
0
Reply
தமிழ்வேள் - திருவள்ளூர்-தொண்டைமண்டலம்-பாரதப் பேரரசு,இந்தியா
14 ஜன,2025 - 19:26 Report Abuse
திராவிட கள்ள சாராய கரை வேட்டிகள் தான் இரண்டு கழிசடை கழகங்களின் ஆட்சியிலும் போலீஸில் இணைக்கப்பட்டார்கள்..அப்புறம் போலீசாருக்கும் ரவுடிகளுக்கும் என்ன வேறுபாடு இருக்க இயலும்? திராவிட கும்பலுக்கு விஷம் வைப்பது ஒன்றே இவர்களை அடக்கும்.அல்லது உணவு டீ சிற்றுண்டி கடைகளுக்கு வந்தால் பேதி மருந்து கலந்து கொடுக்கலாம்... இல்லாமல் இதுகளை ஓரளவாவது அடக்க இயலாது
0
0
Reply
மேலும் 10 கருத்துக்கள்...
மேலும்
Advertisement
Advertisement