அகரம் பேருந்து நிறுத்தத்திற்கு நிழற்குடை அமைக்க முடிவு
சித்தாமூர், சூணாம்பேடு அடுத்த, அகரம் கிராமத்தில் மதுராந்தகம் - வெண்ணாங்குப்பட்டு மாநில நெடுஞ்சாலையோரத்தில் பேருந்து நிறுத்தம் உள்ளது. இதை அகரம், கயநல்லுார் உள்ளிட்ட கிராமத்தினர், பேருந்து வாயிலாக பள்ளி, கல்லுாரி மற்றும் வெளியூர்களுக்கு செல்பவர்கள் பயன்படுத்துகின்றனர்.
தினசரி ஏராளமானோர் பயன்படுத்தும் இந்த பேருந்து நிறுத்தத்தில், 20 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட நிழற்குடை உள்ளது. நிழற்குடை சேதமடைந்து உள்ளதால், புதிய நிழற்குடை அமைக்க அப்பகுதியினர் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.
இந்நிலையில், செய்யூர் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு திட்டத்தின்கீழ் 8 லட்சத்தில் புதிய நிழற்குடைஅமைக்க மதிப்பீடு தயார் செய்யப்பட்டு, கடந்த ஆண்டு ஆக., மாதம் நிர்வாக அனுமதிக்காக அனுப்பிவைக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது, மாவட்ட நிர்வாகம் நிழற்குடை அமைக்க அனுமதி வழங்கி உள்ள நிலையில், விரைவில் புதிய நிழற்குடை அமைக்கப்பட உள்ளது.