த.வெ.க., உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை

ஓசூர்: கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட, த.வெ.க., சார்பில் தேன்கனிக்கோட்டையில், அக்கட்சியில் புதிதாக சேர்ந்தவர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் சுரேஷ், மாவட்ட நிர்வாகி அன்வர்பாஷா தலைமையில், த.வெ.க.,வில் புதிதாக இணைந்த, 100 பேருக்கு உறுப்பினர் அட்டைகள் வழங்கப்பட்டன.


தேன்கனிக்கோட்டை நகர செயலாளர் சந்தோஷ், தளி ஒன்றிய தலைவர் சுரேஷ், கெலமங்கலம் ஒன்றிய தலைவர் முனிராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Advertisement