பவுன் ரூ.59,000 தாண்டியது தங்கம் விலை; காணும் பொங்கலில் ஆபரண பிரியர்களுக்கு ஷாக்
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், இன்று ரூ.59 ஆயிரத்தை தாண்டி விற்பனையாகி வருகிறது.
சர்வதேச அளவில் நிலவும் பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் காரணமாக ஆபரணத் தங்கத்தின் விலையில் மாற்றம் நிகழ்கிறது. கடந்த சில தினங்களாகவே தங்கம் விலை உயர்ந்து வருகிறது.
இந்நிலையில், இன்று (ஜன.,16) சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்தது. ஒரு சவரன் ரூ. 59,120க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராமுக்கு ரூ.50 உயர்ந்து, ரூ.7,390க்கு விற்பனை ஆகிறது.
கடைசி 5 நாட்கள் தங்கம் விலை நிலவரம்;
11/01/2025- ரூ.58,520
13/01/2025- ரூ. 58,720
14/01/2025 - ரூ. 58,640
15/01/2025 - ரூ.58,720
16/01/2025 - ரூ.59,120
தை மாதத்தில் சுப முகூர்த்த நிகழ்வுகள் அதிகமாக நடக்கும் நிலையில், தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது நகை பிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.