பொங்கல் பண்டிகையால் விமான நிலையத்தில் அலைமோதிய கூட்டம்

ஓமலுார்: சேலம் விமான நிலையத்தில் இருந்து சென்னை, பெங்களூரு, கொச்சின், ஹைதராபாத் பகுதிகளுக்கு, இண்டிகோ, அலையன்ஸ் ஏர் விமான நிறுவனங்கள், பயணியர் விமான சேவையை இயக்கி வருகின்றன. தற்போது பொங்கல் பண்டிகையால் இரு நாட்களாக அனைத்து பகுதி விமானங்களில், 65 முதல், 70 இருக்கைகளும் நிரம்பியபடி இயக்கப்பட்டன.

அதேநேரம் சென்னைக்கு, 3,500 ரூபாயாக இருந்த பயண கட்டணம், பொங்கலால், 5,000 முதல், 6,000 ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டது. நேற்றும் பயணியர் கூட்டம் அதிகம் காணப்பட்டதால், விமான நிலையத்தில் கார்கள் அணிவகுத்தபடி நின்றிருந்தன.

Advertisement