அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு துவக்கம்: சீறிப்பாயும் காளைகள்!

3

மதுரை: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு துவங்கியது. வாடிவாசலில் இருந்து பாய்ந்து வரும் காளைகளை, வீரர்கள் உற்சாகத்துடன் அடக்கி வருகின்றனர்.


Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
1brஉலகளவில் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டுக்களில் ஒன்று அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு. அவனியாபுரம், பாலமேட்டை தொடர்ந்து, இன்று(ஜன., 16) அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிகளை துணை முதல்வர் உதயநிதி துவக்கி வைத்தார்.


இந்த போட்டிகளில் பங்கேற்பதற்காக மதுரை மட்டுமல்லாது திண்டுக்கல், சிவகங்கை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஜல்லிக்கட்டு காளைகளின் உரிமையாளர்கள், மாடுபிடி வீரர்கள் அலங்காநல்லூரில் குவிந்துள்ளனர்.


1,000 காளைகள், 900 மாடுபிடி வீரர்கள் போட்டியில் களம் இறங்குகின்றனர். போட்டியில் வெற்றி பெறும் மாடுபிடி வீரர், காளைக்கு, கார், டிராக்டர் உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்பட உள்ளன.

Advertisement