ஆந்திராவில் டிப்பர் லாரி மீது பஸ் மோதி விபத்து; 4 பேர் பரிதாப பலி; 6 பேர் கவலைக்கிடம்

அமராவதி: ஆந்திரா மாநிலம் சித்தூர் அருகே டிப்பர் லாரி மீது பஸ் மோதி விபத்து ஏற்பட்டத்தில், தமிழகத்தை சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 6 பேர் உயிருக்கு போராடி வருகின்றனர்.


ஆந்திரா மாநிலம் சித்தூர் அருகே டிப்பர் லாரி மீது பஸ் மோதி விபத்து ஏற்பட்டது. பஸ்சில் திருப்பதிக்கு திருச்சியை சேர்ந்தவர்கள் 40 பேர் சென்று விட்டு, வீடு திரும்பி கொண்டிருந்த போது விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் திருச்சியை சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர்.



மேலும் 26 பேர் பலத்த காயம் அடைந்துள்ளனர். 6 பேர் பலத்த காயம் அடைந்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.


பஸ்சை டிரைவர் அதி வேகமாக இயக்கியது தான் விபத்திற்கு காரணம் என தெரிகிறது. சித்தூர் மாவட்டம் கங்கசாகரம் அருகே சாலையோரம் நிறுத்தப்பட்ட லாரி மீது பஸ் வேகமாக வந்து விபத்து ஏற்பட்டுள்ளது என போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.



உயிரிழந்த 4 பேரில், குமரியை சேர்ந்த ஜீவன் என்பவர் உடல் அடையாளம் காணப்பட்டது. மீதமுள்ளவர்களை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது.

Advertisement