எகிறிய தங்கம் விலை இன்று சற்று குறைந்தது! ஒரு சவரன் ரூ. 59,480!
சென்னை: சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து, ரூ.59,480க்கு விற்பனை ஆகிறது.
சர்வதேச நிலவரங்களால், உள்நாட்டில் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தமிழகத்தில், 2024 அக்., 31ல், 22 காரட் ஆபரண தங்கம் சவரன், 59,640 ரூபாய்க்கு விற்றது. இதுவே இதுவரை, தங்கம் விற்பனையில் உச்ச விலையாக இருந்தது. பின், தங்கம் விலை சற்று குறைந்தது.
ஜனவரி 16ம் தேதி, ஆபரண தங்கம் கிராம், 7,390 ரூபாய்க்கும்; சவரன், 59,120 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. வெள்ளி கிராம், 103 ரூபாய்க்கு விற்பனையானது. ஜனவரி 17ம் தேதி, தங்கம் விலை கிராமுக்கு, 60 ரூபாய் உயர்ந்து, 7,450 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சவரனுக்கு, 480 ரூபாய் அதிகரித்து, 59,600 ரூபாய்க்கு விற்பனையானது. வெள்ளி கிராமுக்கு, 1 ரூபாய் உயர்ந்து, 104 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
இந்நிலையில், இன்று (ஜன.,18) சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து, ரூ.59,480க்கு விற்பனை ஆகிறது. ஒரு கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.7,435க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த இரு தினங்களில் ரூ.880 உயர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து, சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜெயந்திலால் சலானி, 'டிரம்ப் பதவி ஏற்ற பின், தெளிவான நிலைக்கு தங்கம் விலை திரும்பும். இருப்பினும், ஒட்டுமொத்தமாக வரும் காலங்களில் தங்கம் விலை உயரும்' என தெரிவித்தார்.