வியக்கவைத்த ரஷ்ய நடனம்





சென்னையில் நடைபெற்ற ரஷ்ய கலாச்சார விழாவில் கலந்து கொண்டு பல்வேறு நடனமாடிய 17 ரஷ்ய கலைஞர்கள் பார்வையாளர்களை வியக்கவைத்தனர்.
Latest Tamil News
பாதத்தின் நுனியில்தான் அவர்கள் பலமே இருக்கிறது போலும். அந்த அளவிற்கு பெரும்பாலும் நுனிப்பாதத்திலேயே நடனமாடினர்.அதிலும் ஒரு நடனம் ஆடுபவர்கள் ஆட்களா? அல்லது பொம்மைகளா? என்று வியக்குமளவிற்கு தரையில் பாதத்தின் அசைவே தெரியாமல் ரோபோக்கள் போல ஆடினர்.சில நடனங்களை அக்ரோபாடிக்ஸ் விளையாட்டோ என்று வியக்குமளவிற்கு உடலை வில்லாக வளைத்து ஆடினர்.
Latest Tamil News
இசையும்,நடனமும் மட்டுமல்ல அவர்களது பாராம்பரிய ஆடைகளும் கூட அழகாகவும் வித்தியாசமாகவும் இருந்தது.பாராட்டவேண்டிய முக்கிய விஷயம் அனைவரது முகத்திலும் நிகழ்ச்சி முடியும் வரை காணப்பட்ட அருமையான புன்னகை.
Latest Tamil News
ஒவ்வொரு நடனத்தின் முடிவிலும் பார்வையாளர்கள் முன்வந்து தலை அசைத்து நன்றியை ஏற்றுக்கொண்டு சென்றனர்.ரஷ்யாவிற்கு உரிதான பாலே நடனம் துவங்கி பல்வேறு நடனங்களை ஆடி இரண்டுமணி நேரம் பார்வையாளர்களை கட்டிப்போட்டனர்.
Latest Tamil News
இந்தோ ரஷ்ய கலாச்சார மற்றம் நட்புறவு அமைப்பு சார்பாக சென்னை ரஷ்யன் கலாச்சார மையத்தின் நடைபெற்ற இந்த நடன நிகழ்ச்சி அடுத்துவரும் நாட்களில் கோவை,ஈரோடு,திருச்சி,சிவகாசி .உள்ளீட்ட 18 கல்வி மையங்களில் நடைபெற உள்ளது ஆகவே அங்கே உள்ளவர்கள் இந்த நிகழ்ச்சியை தவறவிட்டுவிடாதீர்கள்.

-எல்.முருகராஜ்

Advertisement