ஆயுதப்படை டி.ஜி.பி. மகேஷ்குமார் அகர்வால் மத்திய அரசு பணிக்கு மாற்றம்!

சென்னை: ஐ.பி.எஸ்., அதிகாரி மகேஷ்குமார் அகர்வால் மத்திய பணிக்கு இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.



தமிழக காவல்துறை ஆயுதப்படை டி.ஜி.பி.யாக இருப்பவர் மகேஷ்குமார் அகர்வால். அவர் தற்போது, மத்திய பணிக்கு இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.


அவருக்கு எல்லை பாதுகாப்புப் படை கூடுதல் இயக்குநர் பொறுப்பு அளிக்கப்பட்டு உள்ளது. மகேஷ்குமார் அகர்வால் இந்த பதவியில் 4 ஆண்டுகள் வரை இருப்பார்.


பஞ்சாபைச் சேர்ந்த மகேஷ்குமார் அகர்வால் 1972ம் ஆண்டு பிறந்தவர். தந்தையை போல சட்டம் படித்துவிட்டு, காவல்துறையில் நுழைந்தவர். 1994ம் ஆண்டு 22 வயதில் ஐ.பி.எஸ்., அதிகாரியாக பணியில் சேர்ந்தவர்.


தேனி எஸ்.பி. தூத்துக்குடி எஸ்.பி.,யாக பணியாற்றி பின்னர் 2001ம் ஆண்டு சென்னைக்கு மாற்றப்பட்டார். பூக்கடை துணை கமிஷனர், போக்குவரத்து துணை கமிஷனர் பதவிகளில் இருந்த அவர், சி.பி.ஐ., அதிகாரியாக 10 ஆண்டுகள் பணியாற்றி மீண்டும் சென்னை திரும்பியவர்.


2020ம் ஆண்டு சென்னை போலீஸ் கமிஷனராக பணியாற்றியவர். சேலத்தில் இருந்து சென்னை வந்த ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவத்தில் இவரது தலைமையிலான சி.பி.சி.ஐ.டி., தான் கொள்ளையர்களை கைது செய்தது.


சென்ட்ரல் ரயில்நிலைய குண்டுவெடிப்பு, சென்னை பெண் என்ஜினியர் உமா மகேஸ்வரி கொலை போன்ற வழக்குகளில் திறம்பட விசாரணை நடத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement