சாலையை ஆக்கிரமித்து கோவில் போலீசில் புகார்

கொரட்டூர்:வீட்டுவசதி வாரிய வரைபடத்தில், கொரட்டூர் வடக்கு நிழற்சாலை,- 38வது தெரு சந்திப்பின் மேற்கு திசையில், 50 அடி நீளத்தில், 50 அகலத்தில் சாலை உள்ளதாக பதிவாகி உள்ளது. அந்த சாலை, பொது பயன்பாட்டிற்காக, மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

சிலர் அந்த சாலையை ஆக்கிரமித்து, சமத்துவஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவில் ஒன்றை கட்டியுள்ளதாக, சென்னை மாநகராட்சி அம்பத்துார் மண்டலம், கொரட்டூர் போலீசிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement