ஜே.இ.இ., மெயின் தேர்வு தொடக்கம்

சேலம்: மத்திய அரசின் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களான, ஐ.ஐ.டி., - என்.ஐ.டி., உள்ளிட்டவற்றில், பி.டெக்., - பி.ஆர்க்., படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கு, ஜே.இ.இ., மெயின் மற்றும் அட்வான்ஸ் தேர்வுகள், தேசிய தேர்வு முகமை மூலம் நடத்தப்படுகின்றன. நடப்பு கல்வியாண்டில் பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு, முதல்கட்ட ஜே.இ.இ., மெயின் தேர்வு, நேற்று தொடங்கியது.


பி.டெக்., படிப்புகளுக்கு முதல் தாள் தேர்வு நேற்று தொடங்கிய நிலையில், நாளை, வரும், 28, 29 ஆகிய நாட்களில், காலை, மாலையில் நடக்கிறது. பி.ஆர்க்., படிப்புகளில் சேர, இரண்டாம் தாள் தேர்வு, வரும், 30 மதியம் நடக்க உள்ளது. இதில் நாடு முழுதும், 12 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளனர். சேலம் மாவட்டத்தில் காகாபாளையம் நாலேட்ஜ் பொறியியல் கல்லுாரியில், ஜே.இ.இ., மெயின் தேர்வு நேற்று தொடங்கியது. மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

Advertisement