சேலத்தில் 24 மணி நேரமும் குடிநீர் வழங்க திட்டம் ரூ.738 கோடி திட்டம் தனியார் வசம் செல்கிறது
சேலம்: சேலம் மாநகராட்சியில், 24 மணி நேரமும் குடிநீர் வழங்கும் திட்-டப்பணிகளை மேற்கொள்ள, 738 கோடி ரூபாயில் ஒப்பந்தம் அறி-விக்கப்பட்டுள்ளது.
சேலம் மாநகராட்சியில் வசிக்கும், 10 லட்சத்துக்கும் மேற்பட்டோ-ருக்கு, மேட்டூர் தனிக்குடிநீர் திட்டத்தில் தினமும், 135 எம்.எல்.டி., குடிநீர், குழாய் வாயிலாகக் கொண்டு வரப்பட்டு, 56 மேல்நிலைத் தொட்டிகள் வாயிலாக வீடுகள், வணிக நிறுவனங்க-ளுக்கு வினியோகிக்கப்படுகின்றன. இத்திட்டத்தில், 3 4 நாட்க-ளுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.
இந்நிலையில் மத்திய அரசின், 'அம்ருத்' திட்டத்தில், 24 மணி நேரம் குடிநீர் வினியோகம் வழங்கும் திட்டம் துவங்கப்பட உள்-ளது. முதற்கட்டமாக, 6 வார்டுகளில் மட்டும் குடிநீர் இணைப்பு வழங்க, தனியார் நிறுவனத்துக்கு கடந்த ஆண்டு அனுமதி அளிக்-கப்பட்டது.
அதில், 20,000 இணைப்புகள் வழங்கும் பணி நடந்து வருகிறது. தற்போது, 70 சதவீதப் பணி முடிந்துள்ளது.
இரண்டாம் கட்டமாக, மாநகராட்சியின் விடுபட்ட அனைத்து பகு-திகளுக்கும், 24 மணிநேர குடிநீர் இணைப்பு வழங்குவதற்கான ஒப்பந்த அறிவிப்பு, தற்போது வெளியிடப்பட்டுள்ளது. மார்ச், 7 வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. 738 கோடி ரூபாயில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, 2.34 லட்சம் வீடுக-ளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இது, 2040ல், சேலம் மாநகராட்சி மக்கள் தொகை, 13.24 லட்ச-மாக அதிகரிக்கும் என கணக்கிட்டு, அதற்கேற்ப திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. ஒப்பந்தத்தில் தேர்வாகும் நிறுவனம், குடிநீர் இணைப்பு வழங்கும் பணியை மேற்கொண்டு, 25 ஆண்-டுக்கு, பராமரிப்பு, வினியோகத்தை மேற்கொள்ளும்படி முடிவு செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டப் பணி முடிந்து அமலுக்கு வந்தால், ஒவ்வொரு குடிநீர் இணைப்புக்கும் மீட்டர் பொருத்தி, 24 மணி நேரமும் குடிநீர் வினியோகிக்கப்படும். அப்போது மின்கட்டணம் போல, பயன்ப-டுத்தும் குடிநீர் அளவுக்கேற்ப, கட்டணம் செலுத்த வேண்டும்.
மாநகராட்சியில், 1.50 லட்சம் குடியிருப்புகள் இருந்தபோதும், 1 லட்சம் வீடுகளுக்கு மட்டும் குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்-டுள்ளன. மற்றவர்களில் பெரும்பாலோர், பொது குடிநீர் குழாயில் குடிநீர் பிடித்து பயன்படுத்துகின்றனர். இத்திட்டம் அமலுக்கு வரும்போது, அனைவருக்கும் இணைப்புகள் வழங்கப்படும் என்-பதால், பொது குடிநீர் குழாய்கள் அகற்றப்படும். அனைவரும் குடிநீரை கட்டணம் செலுத்தி பெற வேண்டும்.