வடமாநில குழந்தைகளுக்கு உதவித்தொகை தமிழக குழந்தைகளுக்கு பாராட்டு மட்டுமே
சேலம்: தமிழக அரசு பள்ளிகளில், ஹிந்தி பாடமோ, ஹிந்தி வழி கல்-வியோ இல்லாததால், வடமாநில தொழிலாளர்கள், தங்கள் குழந்-தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க தயக்கம் காட்டுகின்றனர். இவர்களின் குழந்தைகளை, அரசு பள்ளிகளில் சேர்த்து, தமிழ் படிக்க ஊக்கப்படுத்தும்படி, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தர
விடப்பட்டுள்ளது.
பீகார், சட்டீஸ்கர், மத்திய பிரதேசம், ஜார்கண்ட், ஒடிசா, ராஜஸ்தான், உத்தரபிரதேசம், உத்தராகண்ட், மேற்கு வங்கத்தை சேர்ந்த தொழிலாளர்களில் பெரும்பாலானோர், தமிழ்நாடு, கர்நா-டகா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களுக்கு வேலைவாய்ப்புக்காக புலம் பெயர்ந்துள்ளனர். கடந்த, 2014ல், நடத்தப்பட்ட ஆய்வில் தமிழகத்தில் மட்டும், 10.67 லட்சம் வடமாநில தொழிலாளர்கள் பணிபுரிவது கண்டறிப்பட்டது. அதன் பின், 10 ஆண்டுகள் ஆகி-விட்ட நிலையில், இந்த எண்ணிக்கை பல மடங்காக அதிகரித்-துள்ளது. தமிழகத்தில் ஜவுளி, கட்டுமானம் உள்ளிட்ட துறை-களில், இவர்கள் பெரும்பங்கு வகிக்கின்றனர்.
புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பெரும்பாலானோர், குடும்பத்-துடன் தமிழகத்திலேயே தங்கி விட்டனர். இவர்களின் தாய்-மொழி ஹிந்தியை படிக்க, தமிழக அரசு பள்ளிகளில் வாய்ப்பில்-லாத நிலை உள்ளது. இதனால், குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க, வடமாநில தொழிலாளர்கள் தயக்கம் காட்டுகின்றனர். பல லட்சங்களை கொட்டி, சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் சேர்க்க இய-லாத பலரும், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல், தங்க-ளுடன் உதவிக்கு வைத்துக் கொள்கின்றனர்.
கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, 13 வயதுக்குட்பட்ட குழந்-தைகளை பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக, ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தில், ஆண்டுதோறும் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இதில், கடந்த ஏப்ரலில் பள்ளி செல்லா குழந்தைகள் மற்றும் அதற்கான காரணங்களை கணக்கெடுத்த போது, அதில் வடமா-நில தொழிலாளர்கள் குழந்தைகள் கணிசமாக இடம் பெற்றிருந்-தனர்.
இதையடுத்து, வடமாநில குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க, ஊக்கப்படுத்துமாறு மாவட்ட முதன்மை கல்வி அலுவ-லர்கள் வாயிலாக, பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன், பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
வடமாநிலத்தவர்களின் குழந்தைகளுக்கு, தமிழ் மொழியை பயிற்-றுவிப்பதற்கான முயற்சியை மேற்கொள்ள வேண்டும். அவர்-களின் குழந்தைகளை, அரசு பள்ளிகளில் சேர்க்க அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஊக்குவிக்க வேண்டும். அப்படி சேர்ந்து படிக்கும் மாணவர்கள், அரசு நடத்தும் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்றால், உதவித்தொகை, பரிசு மற்றும் இதர சலு-கைகள் அளித்து உற்சாகப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வடமாநில குழந்தைகளை பள்ளியில் சேர்த்து நன்றாக படித்தால் உதவித்தொகை வழங்க உத்தரவிட்டுள்ள தமிழகஅரசின், பள்ளக்-கல்வி துறை, தமிழக குழந்தைகளை ஊக்குவிக்க பாராட்டுத-லோடு முடித்துக் கொள்கின்றனர்.