கவர்னரின் தேநீர் விருந்து: காங்கிரஸ், மார்க்சிஸ்ட் புறக்கணிப்பு
சென்னை: குடியரசு தினத்தன்று கவர்னர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்தை காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன.
சென்னை கவர்னர் மாளிகையில் குடியரசு தினத்தன்று தேநீர் விருந்து நடப்பது வழக்கம். இந்த தேநீர் விருந்தில் பங்கேற்கும்படி தி.மு.க, அ.தி.மு.க, பா.ஜ., காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்படும். இந்நிலையில், கவர்னர் அளிக்கும் தேநீர் விருந்தை காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன.
இது குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கை: ஆர்.என்.ரவி தமிழக கவர்னராக பதவியேற்றதில் இருந்து தமிழர்களின் நலனுக்கும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அரசுக்கும் எதிராக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். அவரது செயல்பாடுகளால் தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க முடியவில்லை.
சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் வேண்டுமென்றே காலம் தாழ்த்துகிறார். இவரின் செயல்பாடுகளை கண்டிக்கும் வகையில் குடியரசு தின நாளில் அவர் அளிக்கும் குடியரசு தின வரவேற்பு நிகழ்ச்சியையும், தேநீர் விருந்தையும் தமிழக காங்கிரஸ் சட்டசபை எம்.எல்.ஏ.,க்கள் புறக்கணிக்கின்றோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
வாசகர் கருத்து (6)
sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
23 ஜன,2025 - 18:38 Report Abuse
குடியரசு தினத்தன்று கவர்னர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்தை காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் புறக்கணிப்பதாக அறிவித்து உள்ளன.அவர்கள் எதிர்பார்த்த விருந்தே வேறு அது நடைபெறவில்லையே என்ற ஆதங்கம் தேநீர் விருந்தை தவிர்த்து வேறு ஒரு பானம் விருந்தில் இருந்தால் ஒருகால் அவர்கள் கலந்துகொள்வார்களோ என்று தெரியவில்லை
0
0
Reply
angbu ganesh - chennai,இந்தியா
23 ஜன,2025 - 17:32 Report Abuse
quarter கொடுத்து இருந்தா பொய் இருப்பானுங்க
0
0
Reply
Raj - Chennai,இந்தியா
23 ஜன,2025 - 17:30 Report Abuse
செ. பெ தேநீர் விருந்து என்பதால் தான் புறக்கணித்தார்கள் இதே மற்றொன்று என்றால் கலந்து கொள்ள வாய்ப்புள்ளது.
0
0
Reply
kalyanasundaram - ottawa,இந்தியா
23 ஜன,2025 - 16:58 Report Abuse
if these miniature and immature parties not attending such tea party will be a universal catastropic and disastrous and entire world will be destroyed . Tamil proverb reminds that if a cat closes its eyes then entire universe will be in total dark. Stupid persons
0
0
Reply
Murugesan - Abu Dhabi,இந்தியா
23 ஜன,2025 - 15:26 Report Abuse
அயோக்கியனுங்க காசுக்காக அலைகிற பண்றிங்க
0
0
Reply
A.Gomathinayagam - chennai,இந்தியா
23 ஜன,2025 - 14:16 Report Abuse
ஆளும் கட்சி மரியாதை நிமித்தமாக பங்கேற்கும் கடந்த ஆண்டை போல
0
0
Reply
மேலும்
Advertisement
Advertisement