கல்லுாரி 3வது மாடியிலிருந்து குதித்து மாணவர் தற்கொலை: ஆந்திராவில் அதிர்ச்சி சம்பவம்

1

அமராவதி: ஆந்திராவில் உள்ள கல்லுாரியின் 3வது மாடியிலிருந்து குதித்து மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மாநிலத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சம்பவம் கல்லுாரியின் வகுப்பறையில் உள்ள சி.சி.டி.வி.,கேமராவில் பதிவாகி உள்ளது.அந்த வீடியோ காட்சியில், அந்த மாணவன் தனது வகுப்பறையில் இருந்து வெளியேறி மாடியிலிருந்து குதிப்பது தெளிவாக பதிவாகி உள்ளது.

இந்த சம்பவம் குறித்து ஆனந்தாபூர் ரூரல் டி.எஸ்.பி., வெங்கடேசுலு கூறியதாவது:


ஆந்திரா ஸ்ரீசத்ய சாய் மாவட்டத்தை சேர்ந்த மாணவர், தனியார் கல்லுாரியில் இன்டர்மீடியட் முதலாம் ஆண்டு படித்துவந்தார். சங்கராந்தி விடுமுறைக்கு தனது ஊருக்கு சென்றுவிட்டு இன்று காலை கல்லுாரிக்கு வந்து வகுப்பறையில் இருந்தார். வகுப்பறையில் மற்ற மாணவர்களும் இருந்தனர்.

அப்போது, திடீரென எழுந்து வெளியே வந்து கல்லுாரி கட்டிடத்தின் 3வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். அதிர்ச்சியடைந்த மற்ற மாணவர்கள் ஓடிவந்து பார்த்தனர்.
கல்லுாரி பொறுப்பாளர்கள் உடனடியாக, உள்ளூர் போலீசுக்கு தகவல் தந்தனர். மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தற்கொலைக்கான காரணம் குறி்த்து விசாரித்து வருகிறோம்.
இவ்வாறு டி.எஸ்.பி., வெங்கடேசலு கூறினார்.

Advertisement