இ.பி.எஸ்., சுற்றுப்பயணம்; அறிவித்த உடனே ஒத்தி வைப்பு!
கோவை: அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., கோவையில் தொடங்கி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செல்வதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அந்த பயணம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
கோவையில் நடந்த நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர் வேலுமணி பேசியதாவது: அ.தி.மு.க.,வில் ஒவ்வொரு பொறுப்பும் முக்கியமான பொறுப்பு தான். அ.தி.மு.க., ஒரு ராணுவம் போன்று இருக்கும். இந்த இயக்கத்தை யாராலும் அழிக்க முடியும். ஒரு முறை வெற்றி வாய்ப்பை இழக்கும். அடுத்த முறை மீண்டும் வெற்றி பெறும். தி.மு.க., ஒரு முறை வெற்றி பெற்றால், அதன் பிறகு தோல்வி தான்.
2026ல் இ.பி.எஸ்., தான் முதல்வர் ஆவார். எதிர்க்கட்சியாக இருக்கும் பணியாற்றுபவர்களுக்கே ஆட்சிக்கு வந்தால் முக்கியத்துவம் கொடுக்கப்படும். நம்மை விட பெரிய கட்சி தமிழகத்தில் யார் இருக்கிறார்கள். இந்த கட்சிக்கு பெரிய ராசி இருக்கிறது. இரட்டை இலை சின்னம் அ.தி.மு.க.,வின் பிரமாஸ்திரம் என்று ரஜினிகாந்தே சொல்லி இருக்கிறார்.
தொழிலாளர்கள், தொழில் முதலீட்டாளர்கள், அரசு ஊழியர்கள் என யாருமே தி.மு.க.,வுக்கு ஓட்டு போட மாட்டார்கள். மக்கள் எதிர்பார்க்கும் கூட்டணியை இ.பி.எஸ்., அமைப்பார். கோவை மாவட்டத்தில் தி.மு.க., புறக்கணித்த திட்டங்களை நாம் செய்வோம். இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் பேசிய வேலுமணி, முன்னாள் முதல்வர் இ.பி.எஸ்., கோவையில் 31ம் தேதி தொடங்கி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செல்வதாக அறிவித்தார். அறிவித்த அரை மணி நேரத்திலேயே, பயணம் 10 நாள் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவித்து விட்டார்.