பெங்களூருவில் வாடகை வயிற்றை பிசைகிறது !
பெங்களூரு : ஐ.டி., நகரமான பெங்களூருவில் வீட்டு உரிமையாளர்களால் அதிக வாடகை வசூலிக்கப்படுவதால் பலரும் பெரும் பாதிப்புக்குள்ளாவதாக சமூக வலை தளங்களில் பகிரப்படுகிறது.
இந்தியாவின் பிரபல நகரங்களில் பெங்களூருவும் ஒன்று. இங்கு தொழில்கள் பெருகுவதுடன், ஐ.டி. நிறுவனங்கள் அதிகரித்துள்ளன. இதனால் பணியாளர்கள் மட்டுமின்றி தங்குமிடமும் பெரும் சிம்ம சொப்பனமாக உள்ளது.
ஒரு படுக்கையறை கொண்ட ஒரு வீட்டிற்கு 40 ஆயிரம் வரை வாடகை கேட்கின்றனர். 600 சதுர அடி முதல் 800 சதுர அடிக்குள் தான் அளவு இருக்கும். அட்வான்ஸாக 4 லட்சம் வரை நிர்பந்திக்கின்றனர். அப்பார்ட்மென்டில் ஒரு பிளாட் 20 ஆயிரத்திற்கு மேல்தான் வாடகைக்கு உள்ளது. 300 சதுர அடி முதல் 400 சதுர அடி வரை மட்டுமே இந்த பிளாட்களில் உறைவிடம் இருக்கும்.
இது தொடர்பாக சமூக வலைதளங்களில், இப்படியா அநியாயமாக வாடகை வசூலிப்பது ? மும்பையை விட இங்கு வாழ முடியாத அளவிற்கு வாடகை பலரையும் வாட்டி உள்ளது. என்றும் பதிவிட்டுள்ளனர்.