ரவுடிகளுக்கு பட்டப்பெயர் வேண்டாம்: போலீசுக்கு ஐகோர்ட் அறிவுரை

1

சென்னை: '' ரவுடிகளுக்கு பட்டப்பெயர் வைப்பதை போலீசார் தவிர்க்க வேண்டும்,'' என சென்னை ஐகோர்ட் அறிவுரை வழங்கி உள்ளது.


தனிமைச்சிறையில் அடைக்கப்பட்டதை எதிர்த்து ' போலீஸ் ' பக்ருதீன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு, நீதிபதிகள் எஸ்எம் சிவசுப்ரமணியம், ஜோதிராமன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது அரசு தரப்பு வழக்கறிஞர், மனுதாரருக்கு ' போலீஸ் ' பக்ருதீன் என்ற பெயர் எப்படி வந்தது என விளக்கமளிக்க உள்ளதாக கூறினார்.


அப்போது நீதிபதிகள் கூறியதாவது: இதுபோன்ற பெயர்களை வைப்பதே போலீசார் தான். 'பாம்' சரவணன், 'பாம்பு' நாகராஜன் போன்ற பெயர்களை பார்த்தாலே அச்சமாக உள்ளது. இதனால், அவர்களின் பெயர் சமூகத்தில் கெடுகிறது. இதுபோன்ற பட்டப்பெயர் வைப்பதை தவிர்க்க வேண்டும். வேண்டுமானால், ஒரே பெயரில் பலர் இருக்கும்பட்சத்தில் அவர்களை அடையாளம் காண தந்தை பெயருடன் சேர்த்து அழைக்கலாம். பட்டப்பெயர் வைப்பதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

Advertisement