மந்தாரக்குப்பத்தில் எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் பொதுக்கூட்டம்
மந்தாரக்குப்பம்: மந்தாரக்குப்பம் கடை வீதியில் எம்.ஜி.ஆர்., பிறந்த நாளையொட்டி பொதுக்கூட்டம் நடந்தது.
புவனகிரி சட்டசபை தொகுதி அ.தி.மு.க., சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் நகர செயலாளர் மனோகரன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் சின்னரகுராமன் வரவேற்றார். புவனகிரி எம்.எல்.ஏ., அருண்மொழிதேவன், அமைப்பு செயலாளர் அருணாச்சலம், தலைமை கழக பேச்சாளர் செல்வராஜ் ஆகியோர் சிறப்புரையாற்றினர். கவுன்சிலர் ராஜ்மோகன், வழக்கறிஞர் முகமதுநாசர், நகர ஜெ., பேரவை செயலாளர் சதீஷ்குமார், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு சுரேஷ்குமார், கம்மாபுரம் ஒன்றிய சேர்மன் மேனகா விஜயகுமார், முன்னாள் கவுன்சிலர் ராஜபாண்டியன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் லதா சிவக்குமார், தகவல் தொழில்நுட்பு பிரிவு மணிகண்டன், நிர்வாகிகள் சிவா, பாலகிருஷ்ணன், ராஜேந்திரன், வளர்மதி, குப்புசுந்தரம், தமிழரசி, இளவரசன், ராஜவர்மன், குறிஞ்சிசெல்வன், பேரூர், ஒன்றிய, கழக நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.