சிறுபாக்கம் அருகே பஸ் சேவை அமைச்சர் துவக்கி வைப்பு

சிறுபாக்கம்: சிறுபாக்கம் அருகே புதிய அரசு பஸ்சை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் துவக்கி வைத்தார்.

வினாயகனந்தல் - அடரி - கள்ளக்குறிச்சி வரை செல்லும் புதிய அரசு பஸ் துவக்க நிகழ்ச்சி வினாயகனந்தல் ஊராட்சியில் நடந்தது. மங்களூர் தி.மு.க., வடக்கு ஒன்றிய செயலர் சின்னசாமி தலைமை தாங்கினார். தி.மு.க., விளையாட்டு அணி மாவட்ட அமைப்பாளர் வெங்கடேசன், இளைஞரணி ஒன்றிய அமைப்பாளர் சங்கர், ஒன்றிய செயலர்கள் செங்குட்டுவன், அமிர்தலிங்கம் முன்னிலை வகித்தனர். தொழிலாளர் துறை அமைச்சர் கணேசன் கொடியசைத்து அரசு பஸ்சை துவக்கி வைத்தார்.

தி.மு.க., நிர்வாகிகள் சேதுராமன், குமணன், ஜெயராமன், ராஜேந்திரன், ராமதாஸ், வெங்கடேசன், நல்லதம்பி, ரவிக்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement