தாய் சடலத்தை 18 கி.மீ., சைக்கிளில் கொண்டு சென்ற மகன்: திருநெல்வேலியில் நெஞ்சை பதறச் செய்த சம்பவம்

41


திருநெல்வேலி: திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த 65 வயது மூதாட்டி இறக்கும் தருவாயில் வெளியே அனுப்பப்பட்டதால் இறந்த தாயின் உடலை 18 கிலோமீட்டர் தூரத்திற்கு சைக்கிளில் கட்டி எடுத்துச் சென்றார் மகன்.


திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே வடக்கு மீனவன்குளத்தைச் சேர்ந்த ஜெபமாலை மனைவி சிவகாமியம்மாள் 65. மூன்று மகன்கள். மூத்த மகன் சவரிமுத்து கீழக்கடையத்தில் வசிக்கிறார் இரண்டாவது மகன் செல்வம் இறந்துவிட்டார். மூன்றாவது மகன் பாலன் 38 ,தாயை கவனித்து வந்தார். சிவகாமிக்கு தீவிர மன சிதைவு நோய் இருந்தது. இதற்காக அடிக்கடி திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தாயை கொண்டு வந்து சிகிச்சை பெற்று வந்தார்.

பாலனுக்கும் ஒரு விபத்தில் தலையில் காயம் ஏற்பட்டதால் மனம் நலம் பாதிக்கப்பட்டவர். கடந்த சில தினங்களுக்கு முன்பு சிவகாமியம்மாளை திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதித்திருந்தார்.
நேற்று காலை அவரது உடல்நிலை சீரியஸ் ஆனது. எனவே வேறு நபரை அழைத்து வரும்படி மருத்துவமனையில் பாலனிடம் கூறினர். உதவிக்கு யாரும் இல்லாததால் அவர் தவித்தார். எனவே சாகும் தருவாயில் தமது தாயாரை மருத்துவமனையில் இருந்து வெளியே அழைத்துச் சென்றார்.

மருத்துவமனைக்கு அருகே உள்ள ஒரு கோவில் வளாகத்தில் தாயாருக்கு காபி வாங்கி கொடுத்தார் அப்போதே காபி உட்கொள்ள முடியவில்லை. சிறிது நேரத்தில் அவர் இறந்தார். ந நேற்று காலை 11 மணியளவில் இறந்த தாயின் உடலை என்ன செய்வதென்று தெரியாத பாலன் மாலையில் தமது சைக்கிளில் கட்டி உருட்டியபடியே தமது ஊருக்கு எடுத்துச் சென்றார்.

Latest Tamil News
திருநெல்வேலி நாகர்கோவில் நான்கு வழிச்சாலையில் நாங்குநேரிக்கு முன்னதாக மூன்றடைப்பு பகுதியில் இரவு 10 மணி அளவில் அவர் ஒரு சடலத்துடன் செல்வதை பார்த்த மக்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

மூட்டை

போலீசார் அவரை வழிமறித்து விசாரித்தனர். தாயார் இறந்திருப்பதை உறுதி செய்தனர். எனவே ஆம்புலன்ஸ் மூலம் மீண்டும் உடலை திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். இன்று பிரேத பரிசோதனைக்கு அப்புறம் பிறகு உடல் பாலன் மற்றும் அவரது அண்ணன் சவரிமுத்து அழைத்து ஒப்படைக்கப்பட்டது.


பரிதாபம்

பாலனுக்கும் மனநலம் பாதிப்பு இருப்பதால் யாரையும் தொடர்பு கொள்ளவும் முடியவில்லை. வறுமையில் இருந்தார். எனவே வீட்டுக்கு உடலை கொண்டு செல்வதிலேயே குறியாக இருந்தார். திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியில் இருந்து தமது வீட்டுக்கு செல்லும் வழியில் 18 கிலோமீட்டர் தூரம் தாயின் உடலை சைக்கிளின் பின் கேரியரில் வைத்து கட்டி வைத்து உருட்டியபடியே சென்றது பார்த்தவர்களை கண்கலங்க செய்தது. அதில் யாரோ தான் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.


திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உதவிக்கு இல்லாதவர்கள், வறியவர்கள் இறக்கும் தருவாயில் அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு பதிலாக, தானாக தாங்களாகவே வெளியே சென்றார்கள் என கணக்கு காட்டி அனுப்புவதில் தீவிரமாக உள்ளனர். நேற்றும் சிவகாமி அம்மாள் அப்படித்தான் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

மருத்துவமனை டீன் டாக்டர் ரேவதி கூறுகையில், 'பாலன் தன் தாயாரை அழைத்துச் செல்வதாக பிடிவாத்துடன் கேட்கும் போது நாங்கள் எதுவும் செய்ய முடியவில்லை எனவே அவரை அனுப்பி வைத்தோம் அவர் இறந்தது எங்களுக்கு உடனடியாக தெரியவில்லை' என்றார்.

Advertisement