செஸ்: இனியன் சாம்பியன்

ஜோஹர்: மலேசியாவில் ஜோஹர் சர்வதேச செஸ் தொடர் நடந்தது. இந்தியா சார்பில் இனியன் (தமிழகம்), ராகுல் உட்பட மொத்தம் 84 பேர் பங்கேற்றனர். 9 சுற்று போட்டி நடந்தன.
சமீபத்தில் சென்னையில் நடந்த சென்னை ஓபன் சர்வதேச கிராண்ட்மாஸ்டர்ஸ் தொடரில் கோப்பை வென்ற இனியன், மீண்டும் சிறப்பாக செயல்பட்டார்.
முதல் 2 சுற்றில் வெற்றி பெற்ற இவர், 3வது சுற்றில் 'டிரா' செய்தார். அடுத்த 5 சுற்றில் வெற்றி பெற்றார். கடைசி, 9வது சுற்றில் இனியன், வியட்நாமின் நிகுவேன் வானை வீழ்த்தினார்.
முடிவில் 8.5 புள்ளியுடன் முதலிடம் பிடித்த 22 வயது இனியன், கோப்பை வென்றார். ராகுல் 7.0 புள்ளியுடன் இரண்டாவது இடம் பெற்றார்.

Advertisement