மாமல்லபுரத்தில் பெண் கொலை கள்ளக்காதலன் நாடகம் தோல்வி

மாமல்லபுரம்: செங்கல்பட்டு மாவட்டம் பவுஞ்சூர் அடுத்த தர்மாபுரத்தைச் சேர்ந்தவர் சங்கீதா, 33. இவர், ஐந்து ஆண்டுகளுக்கு முன் கணவரை பிரிந்து, கூடுவாஞ்சேரி, நந்தி வரத்தில் பெற்றோருடன் வசித்தார்.

இந்த நிலையில், பவுஞ்சூரைச் சேர்ந்த திருமணமான ஜெயராஜ், 28, என்பவருடன் தொடர்பு ஏற்பட்டு, கள்ளக்காதலாக மாறியுள்ளது.

இந்த நிலையில், கடந்த22ம் தேதி மாமல்லபுரத் தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் அறையெடுத்து தங்கியுள்ளனர். மாலை 3:00 மணியளவில், ஜெயராஜ் வெளியே சென்று மீண்டும் அறைக்கு திரும்பியபோது, சங்கீதா மின் விசிறியில் துப்பட்டாவால் துாக்கிட்டநிலையில், இறந்து தொங்கியுள்ளார்.

விடுதி ஊழியர்கள் மாமல்லபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடலை மீட்ட போலீசார், செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்தனர்.

விசாரணையின்போது ஜெயராஜ் போலீசாரிடம் தெரிவித்ததாவது:

உல்லாசமாக இருக்க விடுதியில் அறை எடுத்தோம். அப்போது அவரது மொபைல் போனில் சிலர் தொடர்பு கொண்டு பேசினர்.

இது தொடர்பாக எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் உணவு வாங்க நான் வெளியே சென்ற நேரத்தில் அவர் துாக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இவ்வாறு அவர்தெரிவித்திருந்தார்.

ஆனால், அவரது நடவடிக்கை சந்தேகத்தை ஏற்படுத்தவே, போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர். இதில் திடுக்கிடும் தகவல் வெளியானது. சங்கீதாவிற்கு வேறு சிலருடன் தொடர்பு இருப்பதாக ஜெயராஜுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால், இருவருக்குள்ளும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால், அவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்த ஜெயராஜ், விடுதியில் அவருடன் உல்லாசமாக இருந்துவிட்டு கழுத்தை நெரித்து கொன்று, தற்கொலை நாடகமாடியது தெரிய வந்துள்ளது.

பிரேத பரிசோதனையி லும் கொலை செய்யப்பட்டது உறுதியானது.

இதையடுத்து போலீசார்அவரை கைது செய்தனர்.

Advertisement