சாந்திகிரி மருத்துவமனையில் சிறப்பு மருத்துவ ஆலோசனை
புதுச்சேரி : புதுச்சேரி சாந்திகிரி ஆயுர்வேதா, சித்தா மருத்துவமனையில், பெண்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் இன்று நடக்கிறது.
கேரளாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் சாந்திகிரி ஆஸ்ரமத்தின் புதுச்சேரி கிளை, எஸ்.வி., பட்டேல் சாலை பழைய சாராய ஆலை அருகில் இயங்கி வருகிறது. இம்மருத்துவமனையில் இன்று (25ம் தேதி) பெண்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடக்கிறது.
காலை 10:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை நடக்கும் முகாமில் கழுத்து , இடுப்பு, மூட்டுவலி, கீழ் வாதம், வாதக்கோளாறுகள், எலும்பு தேய்மானம், நீரிழிவு சிக்கல்கள், சோரியாசிஸ், தோல் நோய்கள், மாதவிடாய் பிரச்னைகள், மன அழுத்தம் மற்றும் துாக்கமின்மை உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு கேரள பாரம்பரிய முறைப்படி ஆலோசனை மற்றும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
கேரளாவில் புகழ்பெற்ற சிறப்பு ஆயுர்வேதா டாக்டர் அதுல்யா சிகிச்சை அளிக்க உள்ளார். சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்பெற 0413 - 2225898, 9585535898 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். முன்பதிவு அவசியம்.