கள்ளக்குறிச்சி அருகே போலி டாக்டர் கைது

சின்னசேலம் : கள்ளக்குறிச்சி அருகே மருத்துவம் படிக்காமல், பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்த போலி டாக்டரை போலீசார் கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், கச்சிராயபாளையம் வட்டார மருத்துவ அலுவலர் சிவப்பிரசாத் தலைமையிலான சுகாதாரத்துறையினர் தனியார் கிளினிக்குகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, கனியாமூரில் உள்ள தனியார் கிளினிக்கில், டாக்டர் இல்லாத நேரத்தில், அங்கு வேலை செய்து வந்த வெட்டிபெருமாள் அகரம் கிராமத்தை சேர்ந்த தங்கராசு மகன் அசோக்,40; எம்.பி.பி.எஸ்., படிக்காமல் பொதுமக்களுக்கு ஆங்கில மருத்துவ சிகிச்சை அளித்தது தெரியவந்தது. அவர் பயன்படுத்திய ஆங்கில மருந்துகள் மற்றும் சிரஞ்சிகளை பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து வட்டார மருத்துவ அலுவலர் சிவப்பிரசாத் அளித்த புகாரின்பேரில் சின்னசேலம் போலீசார் வழக்குப் பதிந்து அசோக்கை கைது செய்தனர்.

Advertisement