நான் முதல்வன் திட்டத்தில் பயனடைந்தோர் 5358 பேர்

மதுரை : மதுரை மாவட்டத்தில் நான் முதல்வன் திட்டத்தின்கீழ் 9 பொறியியல் கல்லுாரிகள், 30 கலை, அறிவியல் கல்லுாரிகள், 13 பாலிடெக்னிக் கல்லுாரிகள், 9 தொழிற் பயிற்சி நிலையங்கள் என மொத்தம் 61 கல்வி நிலையங்களில் மாணவர்களுக்கு திறன் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இலவச திறன் பயிற்சிகள், குறைந்த கட்டணத்துடன் கூடிய பயிற்சிகள், பாடத்திட்டத்துடன் கூடிய திறன் பயிற்சிகள், பாடத்திட்டத்துடன் இணைக்கப்பட உள்ள திறனெய்தும் தொழில்நுட்ப பாடங்கள், போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சிகள், ஆங்கிலம், ஜப்பானிய, ஜெர்மன் மொழித்திறன் பயிற்சிகள், ஆளுமை பயிற்சிகள், உயர்கல்வி நுழைவுத் தேர்வுக்கான பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

மதுரையில் 2022 - 23முதல் இதுவரை 20 ஆயிரத்து 271 பொறியியல் கல்லுாரி மாணவர்கள், 45 ஆயிரத்து 966 கலை, அறிவியல் மாணவர்கள், 9673 பாலிடெக்னிக் மாணவர்கள் என 75 ஆயிரத்து 910 பேர் பயனடைந்துள்ளனர்.

5 ஆயிரத்து 358 பேர் பல்வேறு முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.

Advertisement