ஆர்ப்பாட்டம்

விருதுநகர் : பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது, 70 வயது அடையும் போது 10 சதவீத ஓய்வூதிய உயர்வு வழங்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கம் சார்பில் விருதுநகரில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாவட்ட தலைவர்கள் அலிபாத், உலகநாதன் தலைமை வகித்தனர். அரசு ஊழியர் சங்க முன்னாள் மாநில துணை தலைவர் கண்ணன், ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க மாநில தலைவர் பாலசுப்பிரமணியன், மாவட்ட செயலாளர் சுவிசேசமுத்து பேசினர். செயலாளர் செல்வின் நன்றி கூறினார்.

Advertisement