கள்ளசாராய வழக்கில் கைதான 21 பேரின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயத்தை குடித்து 68 பேர் உயிரிழந்தனர். இவ்வழக்கை விசாரித்த சி.பி.சி.ஐ.டி., போலீசார் 24 பேரை கைது செய்தனர். தற்போது இவ்வழக்கு சி.பி.ஐ.,க்கு மாற்றப்பட்டுள்ளது.
இதில் 3 பேருக்கு ஜாமீன் வழங்கப்பட்ட நிலையில், தற்போது கண்ணுகுட்டி (எ)கோவிந்தராஜ் உள்ளிட்ட 21 பேரின் நீதிமன்ற காவல் நேற்று முடிவடைந்தது. அதனையொட்டி, கடலுார் மத்திய சிறையில் உள்ள 21 பேரையும் காணொலி காட்சி மூலம் விசாரித்த கள்ளக்குறிச்சி தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிபதி ஸ்ரீராம், 21 பேரின் நீதிமன்ற காவலை வரும் பிப்., 7ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement