சாலையில் புலியாட்டம்; போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
திருப்போரூர்:தண்டலம் ஊராட்சி நிர்வாகம், லிங்கம் சிலம்பம் பயிற்சி சார்பில், '' நம்ம ஊர் தண்டலம்- திருப்போரூர் இங்கு வேண்டாம் போதை'' என்ற தலைப்பில் விழிப்புணர்வு பேரணி நடந்தது.
போதை பொருளுக்கு எதிரான மற்றும் போதை பொருளிலிருந்து இளைய சமூகத்தை மீட்டெடுக்க வேண்டும் என, வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடந்தது. ஓ.எம்.ஆர்., சாலை, செங்கல்பட்டு சாலை, தண்டலம் வழியாக பேரணி நடந்தது.
பேரணியில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் புலி வேடமணிந்து புலியாட்டம், சிலம்பாட்டம் ஆடி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement