செங்கை குடியரசு தின விழாவில் ரூ. 89.63 லட்சம் நலத்திட்ட உதவி

செங்கல்பட்டு:செங்கல்பட்டில் நடந்த குடியரசு தின விழாவில், 54 பயனாளிகளுக்கு, 89.63 லட்சம் ரூபாய் மதிப்பில், அரசு நலத்திட்ட உதவிகளை, கலெக்டர் அருண்ராஜ் வழங்கினார்.

செங்கல்பட்டு அடுத்த, மலையடி வேண்பாக்கம் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில், 76 வது குடியரசு தினவிழா, நேற்று நடந்தது. கலெக்டர் அருண்ராஜ் தலைமை வகித்து, தேசிய கொடியை ஏற்றிவைத்து, மூவர்ண பலுான் பறக்க விட்டார்.

பின், ஜீப்பில் கலெக்டர் அருண்ராஜ், எஸ்.பி., சாய் பிரணீத் ஆகியோர் காவல்துறையினர் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டனர்.

தொடர்ந்து, கூட்டுறவுத்துறை சார்பில், 10 பயனாளிகளுக்கு, 58.33 லட்சம் ரூபாய் மதிப்பில் கடனுதவிகள். உழவர் பாதுகாப்பு திட்டத்தில் எட்டு பயனாளிகளுக்கு, திருமண உதவித்தொகை 1.80 லட்சம் ரூபாயும், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை நான்கு பயனாளிகளுக்கு, 11.5 லட்சம் ரூபாய் மதிப்பில் ஈடுபொருள்கள் வழங்கப்பட்டது.

மாற்றுத்திறனாகள்துறை சார்பில், மாற்றுத்திறனாளிகள் ஐந்து பயனாளிகளுக்கு, 5.9 லட்சம் ரூபாய் மதிப்பில் இணைப்புச்சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் வாயிலாக, பல்வேறு நலத்திட்டத்தில், 54 பயனாளிகளுக்கு, 89 லட்சத்து 63 ஆயிரம் ரூபாய் மதிப்பில், நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

மாவட்டத்தில், முலமைச்சர் பதக்கம் 14 போலீசாருக்கும், வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, காவல்துறை உள்ளிட்ட அனைத்து அரசு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 516 அலுவலர்களை பாராட்டி நற்சான்று விருதை கலெக்டர் வழங்கினார். அரசு பள்ளி மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

* முட்டுக்காட்டில் மத்திய அரசின் ஒன்றுக்கு மேற்பட்ட ஊனமுற்றோரின் மேம்பாட்டிற்கான தேசிய நிறுவனத்தில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. மாற்றுத்திறனாளிகள், மாற்றுத்திறனாளிகளின் பெற்றோர்களுக்கு பல்வேறுபோட்டிகள் நடத்தி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

Advertisement