காரணை புதுச்சேரி சாலையில் குப்பை தேக்கத்தால் அபாயம்

கூடுவாஞ்சேரி:ஊரப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட காரணை புதுச்சேரி பிரதான சாலையின் இருபுறமும் குப்பைகள் குவிந்து உள்ளது. இந்த சாலையை பயன்படுத்தி பணிக்கு செல்லும் பெண்கள், பள்ளி செல்லும் மாணவர்கள் என, அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர்.

அதேபோன்று ஊரப்பாக்கத்தில் இருந்து , கீரப்பாக்கம், முருக மங்கலம் உள்ளிட்ட, பகுதிகளுக்கும் அதிகமான வாகனங்கள் சென்று வருகின்றன. இப்பகுதியில் சாலை ஓரம் தேங்கியுள்ள குப்பைகளை அப்பகுதியில் உள்ள மாடுகள், நாய்கள் கிளறி சாலையில் இழுத்து போடுவதுடன், அவ்வழியாக செல்லும், வாகன ஓட்டிகளுக்கு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. சாலையோரம் தேங்கியுள்ள குப்பைகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement