தெப்பக்காடு - மசினகுடி சாலையில் மறியல்
கூடலூர்: குடிநீர் திட்ட பணிகளுக்கு பொருட்கள் கொண்டு செல்வதை வனத்துறையினர் தடுத்ததால் ஆத்திரம் அடைந்த அ.தி.மு.க.,வினர், எம்.எல்.ஏ., தலைமையில் மறியலில் ஈடுபட்டனர்.
நீலகிரி மாவட்டம், முதுமலை மசினகுடி செம்மநத்தம் பகுதியில், கூடலூர், எம்.எல்.ஏ., தொகுதி நிதியில் குடிநீர் திட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதற்கான குழாய்கள், கட்டுமானப் பொருள்கள் எடுத்துச் சென்ற வாகனத்தை வனத்துறையினர் இன்று, தடுத்து நிறுத்தினர்.
இதற்கு, எதிர்ப்பு தெரிவித்து கூடலூர் எம்.எல்.ஏ., பொன்ஜெயசீலன் (அ.தி.மு.க.,) தலைமையில், அ.தி.மு.க.,வினர், பொதுமக்கள், மசினகுடி வனச் சோதனை சாவடி அருகே, தெப்பக்காடு - மசினகுடி சாலையில், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. வனத்துறையினர், போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement