குகேஷ், பிரக்ஞானந்தா வெற்றி

விஜ்க் ஆன் ஜீ: நெதர்லாந்தில், சர்வதேச செஸ் தொடரின் 87வது சீசன் நடக்கிறது. மாஸ்டர்ஸ் பிரிவு 10வது சுற்றில், 'நடப்பு உலக சாம்பியன்' இந்தியாவின் குகேஷ், நெதர்லாந்தின் வார்மெர்டாமை சந்தித்தார். கருப்பு நிற காய்களுடன் விளையாடிய குகேஷ், 34வது நகர்த்தலில் வெற்றி பெற்றார்.
மற்றொரு போட்டியில் இந்தியாவின் பிரக்ஞானந்தா, ரஷ்யாவின் விளாடிமிரை எதிர்கொண்டார். வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா, 45 வது நகர்த்தலில் வெற்றி பெற்றார்.
பத்து சுற்று முடிவில் 5 வெற்றி பெற்ற இந்தியாவின் குகேஷ், 7.5 புள்ளியுடன் முதலிடத்தில் நீடிக்கிறார். உஸ்பெகிஸ்தானின் நாடிர்பெக் (7.0), பிரக்ஞானந்தா (6.5) அடுத்த இரு இடத்தில் உள்ளனர்.

Advertisement