ஆர்.ஐ., அலுவலகம் திறப்பு

அலங்காநல்லுார்; அலங்காநல்லுாரில் புதிய ஆர்.ஐ.,குடியிருப்பு மற்றும் அலுவலகத்தை சென்னையில் இருந்து முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். கலெக்டர் சங்கீதா குத்துவிளக்கு ஏற்றினார். எம்.ல்.ஏ., வெங்கடேசன் தலைமை வகித்தார். தாசில்தார் ராமச்சந்திரன், பேரூராட்சி தலைவர் ரேணுகா ஈஸ்வரி, துணைத் தலைவர் சாமிநாதன் செயல் அலுவலர் ஜெயலட்சுமி முன்னிலை வகித்தனர். ஆர்.ஐ., மாலா வரவேற்றார். வி.ஏ.ஓ.,க்கள்.,கிராம உதவியாளர்கள், தி.மு.க., நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Advertisement