'கிக்' தொழிலாளர் நலவாரிய அறிவிப்பு
மதுரை; தமிழக அரசின் சார்பில் இணையம் சார்ந்த 'கிக்' தொழிலாளர்கள் (தகவல் தொழில்நுட்பத் துறை நிறுவனங்களில் பணிபுரிவோர்) நலனை பாதுகாக்க தனி நலவாரியம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அதில் உறுப்பினராவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு பதிவு செய்வோருக்கு கல்வி, திருமணம், மகப்பேறு, கண் கண்ணாடி, ஓய்வூதியம், இயற்கை மரணம், விபத்து மரணம், விபத்து ஊனம் போன்ற நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. எனவே இணையம் சார்ந்த தொழிலாளர்கள் தங்கள் பிறப்பு சான்று அல்லது பள்ளி மாற்றுச்சான்று, ரேஷன் கார்டு, ஆதார், வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றின் அசல், நகல் ஆவணங்கள், போட்டோக்கள், ஆதார் அட்டையில் இணைத்த அலைபேசி ஆகியவற்றுடன், மதுரை எல்லீஸ் நகர் வீட்டுவசதி வாரியத்தின் முதல்தளத்தில் செயல்படும் தொழிலாளர் உதவி கமிஷனர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகத்தில் ஜன.30 முதல் பிப்.8 வரை காலை 10:30 மணி முதல் மாலை 5:00 மணி வரை நடைபெறும் சிறப்பு முகாமில் பதிவு செய்யலாம்.