பேரிடர் மேலாண்மை ஒத்திகை

திருமங்கலம்; கப்பலுார் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் சார்பில் அவசரகால பேரிடர் மேலாண்மை நிகழ்ச்சி நடந்தது.

சென்னை மணலியில் இருந்து கப்பலுாரில் உள்ள ஐ.ஓ.சி., நிறுவனத்திற்கு பைப் மூலம் பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் கொண்டு வரப்படுகிறது. 20 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய இத்திட்டத்தின் மூலம் கொண்டு வரும் எரிபொருள், தென் மாவட்டங்கள் முழுவதும் விநியோகம் செய்யப்படுகிறது.

அந்த பைப் லைனில் கசிவு ஏற்பட்டால் சரி செய்வது எப்படி, தீப்பற்றினால் அதை அணைப்பது எவ்வாறு என்பது குறித்த செயல்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. திருமங்கலம் தாசில்தார் மனேஷ்குமார், பி.டி.ஓ., சந்திரகலா தலைமை வகித்தனர்.

ஐ.ஓ.சி., மண்டல முதன்மை செயல் மேலாளர் செல்வி மணிலா, முதுநிலை மேலாளர் முருகேசன் பேசினர். திருமங்கலம் தீயணைப்பு நிலைய வீரர்கள், ஐ.ஓ.சி., நிறுவன தீத்தடுப்பு பேரிடர் மீட்பு பிரிவினர் ஒத்திகை நிகழ்ச்சியில் ஈடுபட்டனர். ஏற்பாடுகளை ஐ.ஓ.சி., மண்டல செயல் மேலாளர் சுந்தர், பிருத்வி செய்திருந்தனர்.

Advertisement