மாநிலத்தின் உரிமை நிலைநாட்டப்படும்

'முதுநிலை மருத்துவ படிப்பில், வசிப்பிட ரீதியான இட ஒதுக்கீடு கிடையாது' என, உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு செயல்பாட்டிற்கு வந்தால், தமிழகத்தின் உரிமைகள், இட ஒதுக்கீடு முறைகள் பாதிக்கப்படும். முதுநிலை மருத்துவ படிப்பில் வழங்கப்படும் 50 சதவீத இட ஒதுக்கீடு பறிக்கப்பட்டால், 1,200 சீட்கள் மற்ற மாநிலங்களுக்கு செல்லும். தமிழக அரசை பொறுத்தவரை, 69 சதவீத இட ஒதுக்கீடு தொடர்ந்து அளிக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது. மாநிலத்தின் உரிமையை விட்டுக் கொடுக்க முடியாது. தீர்ப்பு நகல் கிடைத்துள்ளது. இது குறித்து சட்ட வல்லுனர்களிடம் ஆலோசித்து, சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும். இதேபோல, 'சூப்பர் ஸ்பெஷாலிட்டி' முறைக்கு, 2022ல் சோதனை வந்தது. அதை சட்ட ரீதியாக எதிர்கொண்டு, நம் உரிமை நிலைநாட்டப்பட்டது. அதேபோன்று இப்போதும் அரசு நடவடிக்கை எடுக்கும்.

- சுப்பிரமணியன்,

மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர்.

Advertisement