பட்ஜெட் நாளில் தங்கம் விலை உயர்வு; ஒரு சவரன் ரூ.62,320

1

சென்னை: மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தங்கம் விலை இன்று இரண்டாம் முறையாக உயர்ந்தது; கிராம் 7,790 ரூபாய்க்கும், சவரன் 62,320 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.


தமிழகத்தில் நேற்று (ஜன.,31) ஒரே நாளில் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு 960 ரூபாய் உயர்ந்து, 61,840 ரூபாயாக அதிகரித்துள்ளது. கிராமுக்கு 120 ரூபாய் உயர்ந்து, 7,730 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து, 107 ரூபாய்க்கு விற்கப்பட்டது.


இந்நிலையில், இன்று (பிப்.,01) சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ஒரு சவரன் ரூ.61,960க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராமுக்கு ரூ.15 உயர்ந்துள்ளது. அதன் படி ஒரு கிராம் ரூ. 7,745க்கு விற்பனை செய்யப்பட்டது.
மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தங்கம் விலை இன்று இரண்டாம் முறையாக உயர்ந்தது; கிராம் 7,790 ரூபாய்க்கும், சவரன் 62,320 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.



இது குறித்து, நகை வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி கூறியதாவது: உலக பொருளாதாரத்தில் பின்னடைவு ஏற்படலாம் என்ற அச்சத்தில், உலக முதலீட்டாளர்கள் தங்கத்தில் தொடர்ந்து முதலீடு செய்து வருகின்றனர். இதனால், உலக சந்தையில் கடந்த ஒரே வாரத்தில் 31.10 கிராம் எடை கொண்ட அவுன்ஸ் தங்கம் விலை 8,600 ரூபாய் உயர்ந்து, 2.41 லட்சம் ரூபாயானது. அந்த உயர்வு நம் நாட்டிலும் எதிரொலிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement