5 ஆண்டுகளில் மருத்துவ படிப்புக்கு 75 ஆயிரம் கூடுதல் இடங்கள்: பட்ஜெட் ஸ்பெஷல்!

5

புதுடில்லி: அடுத்த ஐந்து ஆண்டுகளில் மருத்துவ படிப்புக்கு 75 ஆயிரம் கூடுதல் இடங்கள் உருவாக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது.


பார்லிமென்டில் 2025-26ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள முக்கிய திட்டங்கள் விவரம் பின்வருமாறு:


* கிராமப்புறங்களில் 1.5 லட்சம் தபால் நிலையங்கள் அமைக்கப்படும்.


* பதிவு செய்யப்பட்ட சிறு தொழில் துறையினருக்கு ரூ 5 லட்சம் கடன் வழங்கப்படும்.


* பட்டியலின பெண்களுக்கு அடுத்த 5 ஆண்டுகளில் ரூ. 2 கோடி கடன் உதவி வழங்கப்படும்.


* சிறு, குறு நிறுவனங்களுக்கான கடன் உத்தரவாதம் ரூ.20 கோடியாக அதிகரிப்பு.


* பொம்மை தயாரிப்பு மையமாக இந்தியா மாற்றப்படும்.


* அனைத்து அரசு உயர்நிலைப் பள்ளிகளிலும் பிராட்பேண்ட் இணைய வசதி வழங்கப்படும்.


* மாணவர்களுக்கான பாடங்களை தாய் மொழியிலேயே டிஜிட்டல் முறையில் வழங்க திட்டம்.


* பீஹாரில் உணவு பதப்படுத்துதலுக்காக தேசிய நிறுவனம் அமைக்கப்படும்.


* மருத்துவ படிப்புக்கு கூடுதலாக பத்தாயிரம் இடங்கள் உருவாக்கப்படும். அடுத்த ஐந்து ஆண்டுகளில் மருத்துவ படிப்புக்கு 75 ஆயிரம் கூடுதல் இடங்கள் உருவாக்கப்படும்


* ஐ.ஐ.டி.,களில் இந்த ஆண்டு கூடுதலாக 65 ஆயிரம் மாணவர்கள் சேர்க்கை.


* அனைத்து மாவட்ட அரசு மருத்துவமனைகளிலும் புற்றுநோய் சிகிச்சை மைய வசதி ஏற்படுத்தப்படும்.


* பீஹார் மாநிலம் பாட்னாவில் உள்ள ஐ.ஐ.டி.,கள் விரிவுபடுத்தப்படும்.


* உடான் திட்டத்தின் கீழ் 120 புதிய வழிதடங்களில் விமான சேவை துவங்கப்படும்.


* ரூ.1கோடியில் நகரங்களில் உள்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்படும்.


* நாட்டிலுள்ள அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் குடிநீர் வழங்கப்படும்.


* ஸ்விக்கி, சொமோட்டோ நிறுவன ஊழியர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும்.


* கூட்டுறவு துறைக்கு கூடுதல் கடன் வசதி.


* 2047க்குள் 100 கிகாவாட் அணு மின் உற்பத்தி செய்ய திட்டம்.


* சுகாதாரம், வேளாண் உள்ளிட்ட 3 துறைகளில் AI மையம் அமைக்கப்படும்.

Advertisement