1 மணி நேரம் 15 நிமிடங்கள் நிதியமைச்சர் நிர்மலா அறிவித்த முக்கிய திட்டங்கள்: முழு விபரம் இதோ!

4


புதுடில்லி: 2025-26க்கான பட்ஜெட் தாக்கல் செய்த அமைச்சர் நிர்மலா சீதாராமன் 1 மணி நேரம் 15 நிமிடங்கள் உரையாற்றினார். பட்ஜெட் தாக்கல் முடிந்தவுடன் பிப்.,3ம் தேதி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது.


முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:



* பாதுகாப்பான குடிநீர் வழங்கும் ஜல்ஜீவன் திட்டம் 2028ம் ஆண்டு வரை நீட்டிப்பு.


* ஆண்டுக்கு ரூ.12 லட்சம் வரை வருவாய் ஈட்டுவோர் புதிய வருமான வரி விகிதத்தின் கீழ் வரி செலுத்த தேவையில்லை.


* வரி விலக்கு அறிவிப்பால் ஆண்டுக்கு நேரடி வரி வருவாய் ரூ. 1 லட்சம் கோடியும், மறைமுக வரி வருவாய் ரூ.2,600 கோடியும் அரசுக்கு வரி இழப்பு ஏற்படும்.


* மின்னணு வாகனங்கள், செல்போன் பேட்டரி உற்பத்திக்கு வரிச் சலுகை; புதிய ஏற்றுமதி ஊக்குவிப்பு வாரியம் அமைக்கப்படும்.


* புற்றுநோய் மருந்து உட்பட 36 வகையான உயிர்காக்கும் மருந்துகளுக்கு இறக்குமதி வரியிலிருந்து விலக்கு.


* ஸ்விக்கி, சோமேட்டோ ஊழியர்களின் நலனுக்காக அடையாள அட்டை; சுகாதாரம், வேளாண் உள்ளிட்ட 3 துறைகளில் AI மையம்.


* மருத்துவ படிப்புக்கு கூடுதலாக 10,000 இடங்கள்; 5 ஆண்டுகளில் மருத்துவ படிப்புக்கு 75,000 கூடுதல் இடங்கள்: ஐ.ஐ.டி.,களில் இந்த ஆண்டு கூடுதலாக 65 ஆயிரம் மாணவர்கள் சேர்க்கை.


* கிராமப்புறங்களில் 1.5 லட்சம் தபால் நிலையங்கள்.


* காலணிகள் தயாரிக்கும் துறையில் 22 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்த நிதி வசதி.


* பட்டியலின பெண்களுக்கு அடுத்த 5 ஆண்டுகளில் ரூ. 2 கோடி கடன் உதவி வழங்கப்படும்.


* பீஹாரில் உணவு பதப்படுத்துதலுக்காக தேசிய நிறுவனம் அமைக்கப்படும்.


* பீஹாரில் மக்கானா (தாமரை விதை) உற்பத்திக் கூடம் அமைக்கப்படும்.


* ரூ.1கோடியில் நகரங்களில் உள்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்படும்.


* பாரதத்தை வளர்ச்சி அடைந்த நாடாக உருவாக்கும் பணியில் தீவிரம்.


* வருமான வரி தாக்கல் செய்யும் காலம் 4 ஆண்டுகளாக அதிகரிப்பு.


* வீட்டு வாடகை டி.டி.எஸ். பிடித்த வரம்பானது ரூ. 6 லட்சமாக உயர்வு.


* 2 சொந்த வீடுகள் வரை வரிச்சலுகைகள் பெறலாம்.


* அணு உலைகள் உருவாக்க 20 ஆயிரம் கோடி நிதி.


* 120 புதிய வழித்தடங்களில் புதிய விமான சேவை.


* அரசு உயர் நிலை பள்ளிகளில் பிராட்பேண்ட் மூலம் இணைய வசதி.


* கூட்டுறவு, சிறு தொழில் நிறுவனத்திற்கு கூடுதல் கடன் உதவி.


* வேளாண் உற்பத்தியை அதிகரிக்க புது திட்டம்.


* கிசான் கார்டு மூலம் விவசாய கடன் ரூ. 5 லட்சமாக உயர்வு.


* புதிய வருமான வரி மசோதா விரைவில் தாக்கல்.


*பருப்பு உற்பத்தியை அதிகரிக்கும் சிறப்பான சாகுபடியை தரும் விதைகள் வழங்கும் திட்டம் நாடு முழுவதும் செயல்படுத்தப்படும்.


* அசாமில் யூரியா உற்பத்தி தொழிற்சாலை அமைக்கப்படும்.


* பருத்தி உற்பத்தியை அதிகரிக்க திட்டங்கள் செயல்படுத்தப்படும்.


* கிசான் கடன் அட்டை மூலம் 7.7 கோடி விவசாயிகள் குறுகிய கால கடன்பெற நடவடிக்கை எடுக்கப்படும்.


* பட்டியல், பழங்குடி, பிற்படுத்தப்பட்ட வகுப்புகளைச் சேர்ந்த மகளிருக்கு, புதிதாக தொழில்முனைவோருக்கு ரூ.2 கோடி வரை கடன் உதவி வழங்கப்படும்.


* காலணி மற்றும் தோல் துறையில் 22 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கும் வகையில், சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும்.


* இந்தியாவில் பொம்மை உற்பத்தித் துறை சந்தைக்கு சர்வதேச மையம் உருவாக்கும் வகையில் சிறப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

Advertisement