திட்டங்கள், சலுகைகள் ஏராளம்! மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு
புதுடில்லி ; பிரதமர் மோடி 3வது முறை பிரதமராக பொறுப்பேற்ற பின்னர் தமிழகத்தை சேர்ந்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் 8 வது பட்ஜெட் இதுவாகும். முன்னதாக ஜனாதிபதி திரவுபதி முர்முவுடன் நிதி அமைச்சர் நிர்மலா சந்தித்தார். பட்ஜெட் உரையை துவக்கியதும் எதிர்கட்சிகள் கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டனர் தொடர்ந்து வெளிநடப்பு செய்தனர்.
பீகாருக்கு நீர்ப்பாசனம், தேசிய உணவுப்படுத்தும் மையம், புதிய விமான நிலையம் என கூடுதல் திட்டங்கள் அறிவிக்கப்பட்டதால் எதிர்கட்சியினர் எதிர்ப்பு குரல் எழுப்பினர். தனிநபர் ஆண்டு வருமான உச்ச வரம்பு ரூ.7 லட்சத்தில் இருந்து ரூ.12 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. மாதம் ஊதியம் ஒரு லட்சம் வரை சம்பளம் வாங்குவோர் வரி செலுத்த வேண்டியது இருக்காது. நடுத்தர மற்றும் மாதாந்திர சம்பளதாரர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இன்றைய பட்ஜெட் உரையில் நிர்மலா சீதாரமான் கூறியதாவது:
உலகில் நாட்டின் பொருளாதாரம் நல்ல நிலையில் வேகமாக முன்னேறி வருகிறது. பொருளாதார வளர்ச்சியை மையமாக கொண்டு இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. வேளாண் உற்பத்தியை பெருக்க மாநில அரசுடன் இணைந்து கிராமப்புறங்களில் புதிய திட்டம் நிறைவேற்றப்பட உள்ளது. பருப்பு, காய், கனி உற்பத்தி பெருக்கப்படும். இந்த புதிய வேளாண் திட்டம் மூலம் 1.7 கோடி விவசாயிகள் பயன்பெறுவர். ஏழைகள், இளைஞர்கள், பெண்கள், விவசாயிகளை கருத்தில் கொண்டு இந்த பட்ஜெட் தயாரித்துள்ளோம். வரி, மின்சாரம், நிதி, சுரங்கம், சீர்திருத்தம் ஆகியவற்றை மையமாக கொண்ட பட்ஜெட். சிறு நிறுவனங்களுக்கு கூடுதல் கடன் வழங்கப்படும். கிராமங்களில் 1.5 லட்சம் தபால் நிலையங்கள் அமைக்கப்படும். இவ்வாறு கூறினார்.
நிதி அமைச்சர் நிர்மலா மேலும் அறிவித்த திட்டங்கள் விவரம் வருமாறு:
* புதிய வருமான வரி மசோதா விரைவில் தாக்கல்
*பீகார் மாநிலத்திற்கு கூடுதல் சலுகை திட்டம்
*ஏ.ஐ., தொழில்நுட்பத்திற்கு 5 ஆயிரம் கோடியில் திட்டம்
*அரசு உயர் நிலை பள்ளிகளில் பிராட்பேண்ட் மூலம் இணய வசதி
*கூட்டுறவு, சிறு தொழில் நிறுவனத்திற்கு கூடுதல் கடன் உதவி
*பட்டியலின பெண்களுக்கு கடன் வழங்கும் திட்டம்
*கிசான் கார்டு மூலம் விவசாய கடன் ரூ. 5 லட்சமாக உயர்வு
*அசாமில் யூரியா உற்பத்தி தொழிற்சாலை
* அந்நிய நேரடி முதலீடு 100 சதவீதமாக அதிகரிப்பு
* மின்சார வாகனம், மொபைல் பேட்டரிக்கு வரி சலுகை
* உயிர்காக்கும் மருந்துகளுக்கு இறக்குமதி வரி விலக்கு
* ஆண்டு வருமானம் ரூ. 12 லட்சம் வரை வருமான வரி இல்லை
* தாக்கல் செய்யும் காலம் 4 ஆண்டாக அதிகரிப்பு
* வீட்டு வாடகை டி.டி.எஸ்., ரூ. 6 லட்சமாக உயர்வு.
* மறைமுக வரியில் சீர்திருத்தங்கள்
New tax regime:
Up to Rs 4 lakh - 0%
Rs 4-8 lakh - 5%
Rs 8-12 lakh - 10%
Rs 12-16 lakh - 15%
Rs 16-20 lakh - 20%
Rs 20-24 lakh - 25%
Above Rs 24 lakh - 30%