அடுத்த வாரம் புதிய வருமானவரி மசோதா அறிமுகம்!

புதுடில்லி: அடுத்த வாரம் புதிய வருமான வரி மசோதா அறிமுகம் செய்யப்பட உள்ளது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் விவரம் பின்வருமாறு:


* நாட்டில் உள்ள 50 முக்கிய சுற்றுலாத்தலங்கள் மாநில அரசுகளுடன் இணைந்து மேம்படுத்தப்பட உள்ளது.


* குறிப்பிட்ட சுற்றுலா குழுவினருக்கு விசா விண்ணப்ப கட்டணத்தில் இருந்து முற்றிலும் விலக்கு.


* மருத்துவ சுற்றுலா திட்டங்கள் ஊக்குவிக்கப்படும்.


* ஐஐடியில் பயிலும் பத்தாயிரம் ஆராய்ச்சி மாணவர்களுக்கு பிரதமரின் ஆராய்ச்சி ஊக்க தொகை திட்டம்.


* உள்நாட்டு எலக்ட்ரானிக் பொருட்கள் உற்பத்தி மையங்களை அரசு துவங்க உள்ளது.


* 36 வகையான உயிர்காக்கும் புற்றுநோய் மருந்துகளுக்கு இறக்குமதி வரி விலக்கு.


* புதிய ஏற்றுமதி ஊக்குவிப்பு வாரியம் அமைக்கப்படும்.


* காப்பீட்டு துறையில் அந்நிய நேரடி முதலீடு, 74 சதவீதத்தில் இருந்து 100 சதவீதமாக அதிகரிப்பு.




* நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியில் நிதி பற்றாக்குறை 4.8 சதவீதமாக உள்ளது.


* விண்வெளித் துறை வளர்ச்சிக்காக தேசிய அளவில் ஜியோ ஸ்பேஸ் இயக்கம் உருவாக்கப்படும்.


* மின்சார வாகனங்கள் மற்றும் செல்போன் பேட்டரி உற்பத்திக்கு வரி சலுகை.

Advertisement