டில்லியில் பிளாஸ்டிக் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து
புதுடில்லி: டில்லியில் பிளாஸ்டிக் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. நீண்ட நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.
டில்லியில் உள்ள பவானாவில் பிளாஸ்டிக் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு 16 தீயணைப்பு வாகனங்களில் தீயணைப்பு படையினர் விரைந்தனர். நீண்ட நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.
தீ விபத்தால் ஏற்பட்ட உயர்சேதங்கள், பொருட் சேதங்கள் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. தீ விபத்துக்கான காரணம் குறித்து விரிவான விசாரணை நடந்து வருகிறது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement