அதெல்லாம் மக்களிடம் எடுபடாது: அடித்துச்சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்

14

திருநெல்வேலி: ''கட்சி துவங்கும்போதே ஆட்சி அமைக்கப்போகிறோம். முதல்வர் ஆகப்போகிறேன் என்கிறார்கள். இது மக்களிடம் எடுபடாது ,'' என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.


@1br@திருநெல்வேலியில், வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் தி.மு.க.,வில் இணையும் நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:தேர்தலில் போட்டியிடலாமா என தொண்டர்களிடம் கருத்துக்கேட்டே தி.மு.க., தேர்தலில் களமிறங்கியது. ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஏழை எளிய மக்களுக்காக தி.மு.க., தொடர்ந்து பாடுபடும்.
Tamil News
ஒட்டு மொத்த தமிழினத்திற்காகவும் என்றும் பாடுபடும். தி.மு.க., படிப்படியாக வளர்ந்து 6வது முறையாக ஆட்சி அமைத்து உள்ளது. 2026லும் 7வது முறையாக தி.மு.க., ஆட்சி என்பதை மக்கள் முடிவு செய்துவிட்டனர்.


கட்சி துவங்கிய உடனே நாங்கள் தான் ஆட்சி அமைக்கப் போகிறோம். நான் தான் முதல்வர் ஆகப் போகிறேன் என்கிறார்கள். தான் தான் முதல்வர் எனக்கூறுவது எல்லாம் மக்களிடம் எடுபடாது. மக்களுக்கு அனைத்தும் தெரியும். யார் மக்கள் பணியாற்றவார்கள்? யார் மக்களுக்கு தொண்டாற்றுவார்கள் என்பது மக்களுக்கு தெரியும்.
இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.


இந்த நிகழ்ச்சியில் பா.ஜ., முன்னாள் மாவட்ட தலைவர் தயா சங்கர் உள்ளிட்டோர், தி.மு.க.வில் இணைந்தனர்.

Advertisement