மனைவி தாய் வீட்டுக்கு சென்ற ஹேப்பி: பிஸ்கட் வழங்கி கொண்டாட்டம்
![](https://images.dinamalar.com/data/large_2024/Tamil_News_lrg_384911420250207101817.jpg?width=1000&height=625)
பெங்களூரு; மனைவி தாய் வீட்டுக்கு சென்றதை, ஒரு ஆட்டோ
ஓட்டுநர், வாடிக்கையாளர்களுக்கு இலவச பிஸ்கட் கொடுத்து கொண்டாடியது, சமூக
வலைதளத்தில் பரவி வருகிறது.
பெங்களூரில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர்,
நேற்று முன்தினம் வழக்கம் போன்று சவாரிக்கு சென்றார். தன் ஆட்டோவில்
பயணித்த வாடிக்கையாளர்களுக்கு, இலவசமாக, 'மில்க் பிகிஸ்' பிஸ்கட்
பாக்கெட்டுகளை கொடுத்தார்.
இதற்கு என்ன காரணம் என, பயணியர் கேட்ட
போது, 'என் மனைவி தன் தாய் வீட்டுக்கு சென்றுள்ளார். இதனால் நான் மிகவும்
மகிழ்ச்சியாக இருக்கிறேன்.
'அதை கொண்டாட அனைத்து பயணியருக்கும் இலவச பிஸ்கட் பாக்கெட்டுகள் வழங்குகிறேன்' என பதில் அளித்துள்ளார். இது
மட்டுமன்றி தன் மனைவி தாய் வீட்டுக்கு சென்றுள்ளது குறித்து, ஆட்டோவில்
கன்னடம், ஆங்கிலம் என, இரண்டு மொழிகளில் போர்டும் எழுதி வைத்துள்ளார்.
இதை ஒரு பயணி, தன் மொபைல் போனில் வீடியோ எடுத்து, சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். பலரும் நகைச்சுவையாக கமென்ட் செய்துள்ளனர். சிலர் 'மனைவி தாய் வீட்டு சென்றதால், பாவம், ஆட்டோ டிரைவர் குஷியாக இருந்தார். இப்போது நீங்கள் சமூக வலைதளத்தில் பரப்பிவிட்டீர்கள்.
இந்த விஷயம் அவரது மனைவிக்கு தெரிந்தால், அந்நபர் நிரந்தரமாக ஆட்டோவிலேயே உறங்க வேண்டி வரும்' என கமென்ட் செய்துள்ளனர்.
![Sampath Kumar Sampath Kumar](http://stat.dinamalar.com/new/2012/images/no_image.jpg)
![Barakat Ali Barakat Ali](https://img.dinamalar.com/data/uphoto/444798_115337820.jpg)
![சண்முகம் சண்முகம்](http://stat.dinamalar.com/new/2012/images/no_image.jpg)
மேலும்
-
ரத்தன் டாடா சொத்தில் மோகினிமோகன் தத்தாவுக்கு ரூ.500 கோடி பங்கு... யார் இவர் தெரியுமா?
-
எல்லாம் நன்மையாக நடக்கும்போது ஆன்மீகத் தேடல் வருவதில்லையே, ஏன்?
-
ஈஷா மண் காப்போம் இயக்கம் சார்பில் “ஒருங்கிணைந்த பண்ணையம் ஒவ்வொரு நாளும் வருமானம்” கருத்தரங்கு!
-
கர்நாடகா முதல்வருக்கு நிம்மதி: நில மோசடி வழக்கில் சி.பி.ஐ., விசாரணைக்கு மறுப்பு
-
பிரான்சில் பிப்.,11ல் ஏ.ஐ., உச்சி மாநாடு; பங்கேற்கிறார் பிரதமர் மோடி
-
100 சதவீதம் சொத்து வரி உயர்வுக்கு எதிர்ப்பு; கோவை மாநகராட்சியை கண்டித்து தி.மு.க., கூட்டணி கட்சிகள் போராட்டம்